Thanjai

Thanjai

புதன், 23 மார்ச், 2011

மறக்க முடியாத பொங்கல்

மங்கை பிப்ரவரி 1994 இதழில் வெளியானது



சுமார் பதினெட்டு வருடங்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சி இது. நாங்கள் அச்சமயம் கணியம்பாடி என்ற ஊரில் இருந்தோம்.

பொங்கலன்று காலை 8 மணி இருக்கும். என் அப்பா பூஜையிலும், என் அம்மா சமையலிலும் மும்முரமாக இருக்க என் 12 வயது தம்பி அவன் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான். நாங்கள் இருந்த வீட்டின் சொந்தக்காரர்கள் வாயில் நிலைப்படிக்கு மாவிலைக் கொத்து கட்ட நிலைப்படி முன்பு ஒரு சிறிய பெஞ்ச் போட்டிருக்கிறார்கள். விளையாட்டு வேகத்தில் என் தம்பி அந்த பெஞ்சின் மீது தாண்டிக் குதிக்கும்போது, அந்த நிலைப்படியின் கூர்மையான மேல் பகுதி நடு மண்டையில் குத்தி ஒரே ரத்த வெள்ளம். அவனிடம் பேச்சே இல்லை. ரத்தம் எவ்வளவு துடைத்தும் நின்ற பாடில்லை.

பூஜையைப் பாதியில் விட்டு வந்த என் அப்பா, அப்படியே அவனை டாக்டரிடம் தூக்கிக் கொண்டு ஓடினார். டாக்டர் அவன் தலையைப் பார்த்துவிட்டு ‘மண்டையில் நல்ல அடி. உடனே தையல் போட வேண்டும்’ என்று சொல்லி அந்த இடத்தில் தலைமுடியை மெதுவாக வெட்டி என் அப்பாவின் துணையுடனேயே தலையில் ஒரு விரல் நீளத்திற்கு தைத்து நன்றாக பாண்டேஜ் போட்டு கழுத்தோடு சேர்த்துக் கட்டு போட்டு விட்டார். ஒவ்வொரு வருடமும் எங்களோடெல்லாம் சண்டை போட்டுக் கொண்டு அதிக பங்கு கரும்பு தின்பவன், அந்த வருடம் ஒரு துண்டு கூட சாப்பிட முடியவில்லை. அதனால் எங்களுக்கும் ரசிக்கவில்லை.

இன்று அவனுக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகளும் இருக்கிறார்கள். இன்றைக்கும் பொங்கல் என்றதும் உடன் நினைவுக்கு வருவது இந்த நிகழ்ச்சிதான்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக