Thanjai

Thanjai

ஞாயிறு, 20 மார்ச், 2011

விளக்குமாறுக்கும் பூஜை செய்யறாங்க!


குமுதம் சிநேகிதி மார்ச் 15, 2006 இதழில் வெளியானது.

விளக்குமாற்றுக்கு பட்டுக் குஞ்சமா?' என்று நாம் பரிகாசம் செய்வதுண்டு. 'துடப்பைக் கட்டை' என்று கேவலமாகப் பேசும் அந்த விளக்குமாற்றுக்கு மகராஷ்டிராவில் ஏக மரியாதையாக்கும்!

விளக்குமாறு இங்கு லட்சுமியாகப் போற்றப்படுகிறது. புதிய விளக்குமாற்றை எப்பொழுதும் படுத்த நிலையிலேயே வைக்க வேண்டும். கதவு மூலைகளில் நிறுத்திவைப்பதோ, தூக்கி எறிவதோ, காலால் மிதிப்பதோ கூடாது.

நமக்கு வெள்ளிக் கிழமை போல் மராட்டியருக்கு வியாழக்கிழமை லட்சுமிக்கு உகந்த நாள். அன்றைக்கு விளக்குமாறு வாங்கினால் செல்வம் சேருமென்பது, அவர்கள் நம்பிக்கை! புதன், சனி போன்ற ஆகாத நாட்களில் வாங்கினால் பாவம் சேருமாம்!

சுத்தமான, தூய்மையான இடங்களில் மட்டுமே லட்சுமி வாசம் செய்வாள். இல்லத்தின் தூசு, தும்பு, குப்பைகளை நீக்கி மகாலட்சுமிக்கு நல்வரவு கூறும் துடைப்பத்திற்கு, எத்தனை முக்கியத்துவம் தெரியுமா? 'தீபாவளி' அன்று செய்யப்படும் லட்சுமி பூஜையிலும் கண்டிப்பாக இடம் பெறும்!

ஆம்! புத்தம் புதிய துடைப்பம், முறம் இவற்றுடன்தான் மராட்டியர்களின் தீபாவளி பூஜை நடைபெறும்!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக