Thanjai

Thanjai

வியாழன், 17 மார்ச், 2011

அவள் விகடனில் வெளியான துணுக்கு

ஆமாமா .................. அப்படித்தான்

அவள் விகடன் ஆகஸ்டு 1, 2003 இதழில் வெளியானது



இன்னும் சில குணங்கள் ஆண்களுக்கே உரிய அலாதியான குணங்கள்! சின்ன தலைவலி வந்தால் கூட வீடு தாங்காதப்பா! ‘ஐயோ’, ‘அம்மா’ என்று பாடாய்ப் படுத்தி விடுவார்கள். சகல சிசுருஷைகளும் சுற்றியிருப்போர் செய்ய வேண்டும்! பெண்கள் மாதவிலக்கு, பிரசவம் என்று எத்தனை வலிகளைத் தாங்குகிறோம்? அதனால்தான் கடவுள் எல்லா உடல் துன்பங்களையும் பெண்ணுக்கு மட்டுமே வைத்தாண் போலும்!

‘பாஸிடிவ்’ விஷயங்களுக்கு தன்னை காரணம் சொல்லி பெருமைப் படுவதில் ஆண்களை யார் மிஞ்ச முடியும்? குழந்தை முதல் மார்க் வாங்கி விட்டால் ‘அவன் என் பிள்ளையாக்கும்...!’ என்பார்கள். மதிப்பெண் குறைந்தாலோ ‘உன் பிள்ளை வேறெப்படி இருப்பான்...?’ என்ற நக்கல்.

நாம் பத்து முறை சொல்லியனுப்பிய சாமாண் வாங்க மறந்து விடும். சிகரட், பான்பராக் வாங்கி ஸ்டாக் வைக்க மட்டும் மறப்பதேயில்லை! ஆனாலும் ஒன்றை சொல்ல வேண்டும்...

தப்பு செய்து விட்டு, அதை மறைக்கத் தெரியாமல் மாட்டிக் கொண்டு ‘திரு திரு’ என்று முழிப்பதும் ஆண்களின் பெரிய வீக்னஸ்! (நமக்கு அதுவே ஒரு பெரிய பாதுகாப்பு. அப்படித்தானே)





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக