Thanjai

Thanjai

திங்கள், 28 மார்ச், 2011

கடிதம் தந்த கழிப்பறை

ஆனந்த விகடன் – 20-07-2002 இதழில் வெளியானது






ரயில்வே நிர்வாகம் 150-ம் வருட விழாவை மிக விமரிசையாகக் கொண்டாடுகிறது. ரயிகளில் கழிவறை கிடையாது. இந்த வசதி பின்னர் வந்ததற்கு ஒரு சுவாரஸ்யமான காரணம் உண்டு.

1909-ம் வருடம் ஆங்கிலேய ரயில்வே உயர் அதிகாரி ஒருவருக்கு ஒகில்சென் என்ற பயணி ஒரு கடிதம் எழுதினார். ‘நான் நிறைய பலாப்பழம் சாப்பிட்டதால், அகமத்பூர் ஸ்டேஷனில் எனக்குக் கழிவறை செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. கீழே இறங்கிச் சென்று வருவதற்குள் கார்டு விசில் ஊதிவிட்டார். வண்டி கிளம்பி விட்டது. ஒரு கையில் லோட்டாவும், மறு கையில் வேட்டியுமாக ஓடி வந்தது  பெரும் அவமானமாகப் போய்விட்ட்து, கழிவறை சென்ற பயணிக்காக ரயிலை நிற்க வைக்காத கார்டு தண்டிக்கப்பட வேண்டும்’ என எழுதிய கடிதம் தான், பின்னாளில் ரயில்களில் கழிவறைகள் ஏற்படுத்தக் காரணமாக அமைந்தது!




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக