Thanjai

Thanjai

சனி, 19 மார்ச், 2011

கணபதி பப்பா மோரியா


கணபதி பப்பா மோரியா
(சக்தி விகடன் 15-09-2008 இதழில் வெளியானது)


மகாராஷ்டிர மாநிலத்தில் 10 நாள் விழாவாக விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.  வீடுகள்தோறும் 5 நாட்கள் பூஜை நடத்துவர்.

இங்கு விநாயக சதுர்த்திக்கு இரண்டு நாளுக்கு முன்னதாக கௌரி பூஜை நடத்துவது வழக்கம். 'பிள்ளையை வரவேற்க தாயானவள் முன்னதாகவே வந்து விடுகிறாள்!' என்பது மகாராஷ்டிர மக்களின் நம்பிக்கை.

விநாயக சதுர்த்தி திருநாளன்று நல்ல நேரம் பார்த்து, வீட்டில் உள்ள அனைவரும் பஜனை செய்தபடி, கடைக்குச் செனறு (ஏற்கனவே கடைகளில் விநாயகர் சிலைக்கு பதிவு செய்து வைத்திருப்பார்களாம்!) கணபதி சிலையைப் பெற்று, வீட்டுக்குக் கொண்டு வருகிறார்கள். பிறகு, தங்கள் இல்லத்தில் விமரிசையாக பூஜைகள் செய்து வழிபடுவர்.


விழாவின் தொடர்ச்சியாக குடும்பத்தார் புடை சூழ... 'கணபதி பப்பா மோரியா புடிச்சா வர்ஷி லவ்கர்யா' (கணபதி பெருமானே! அடுத்த வருடம் விரைவாக வா) என்று பாடியபடி கோலாகலமாக பூஜித்த விநாயகர் திருவுருவை எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைத்து விட்டு திரும்புகிறார்கள். விநாயக சதுர்த்தியனறு வேண்டப்படும் பிரார்த்தனைகள் அனைத்தும், கணபதியின் அருளால் விரைவில் நிறைவேறும் என்பது அவர்களது நம்பிக்கை.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக