Thanjai

Thanjai

திங்கள், 28 மார்ச், 2011

கர்ண பரம்பரைக் கதை

யார் எஜமான்


சாவி 02-06-1993 இதழில் வெளியானது
ஒரு குடியானவன் பண்ணை ஒன்றை நடத்தி வந்தான். அதில் ஒரு சேவலும் இருந்தது. அதற்கு மிகவும் கர்வம். அது ஒரு குப்பை மேட்டில் அடிக்கடி ஏறி நின்று கொண்டு, “நான் தான் இந்தப் பண்ணையின் எஜமானன்” என்று தெருவில் போகிற எல்லாப் பிராணிகளிடமும் கர்வத்தோடு சொல்லும். இதைக் கேட்டு அவை ஏளனமாகச் சிரித்து விட்டுச் செல்லும்.

ஒரு நாள் நரி ஒன்று இரை தேடி அவ்வழியே சென்றது.

“ஏய், என்ன திமிர் உனக்கு? என்னைப் பார்க்காமல் போகிறாயே! நான் தான் இப்பண்ணையின் எஜமானன். நான் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்வேன்!”


எங்கே, இன்னொரு முறை சொல். எனக்குக் காது கேட்கவில்லை” என்றது நரி.

சேவல் திரும்பக் கூறியது, “அப்படியா? எது வேண்டுமானாலும் செய்வாயா? சரி, இந்தப் பண்ணைக்கு நீ தான் எஜமானன் என்றால், கண்களை மூடிக் கொண்டு உரக்கக் கூவ வேண்டும். முடியுமா உன்னால்?” என்று சவால் விட்டது நரி.

“ப்பூ... இதென்ன பிரமாத காரியம்?” என்ற சேவல், கண்களை மூடிக் கொண்டு ‘கொக்கரக்கோ’ என்று கூவியது.

நரி அடுத்த விநாடி அதன் மீது பாய்ந்து சேவலை வாயில் கவ்விக் கொண்டு ஓடியது.

‘அகம்பாவம் கொண்ட சேவலே! மாட்டிக் கொண்டாயா? உன் கர்வமே உன்னைச் சங்கடத்தில் மாட்டி விட்டது பார்! எப்படியோ... இன்றிரவு எனக்கும், என் குழந்தைகளுக்கும் அருமையான விருந்து’ என்று எண்ணியபடி வேகமாக ஓடியது நரி.

சேவலுடன் ஓடும் நரியைக் கண்ட ஊர் மக்கள் தடியுடன் துரத்தி வந்தார்கள். நரி அவர்களிடம் பிடிபடாமல் தப்பித்து விடும் போல இருந்தது.

“நரியே, நரியே! உன்னைத் துரத்திக் கொண்டு மக்கள் ஓடி வருகிறார்கள், பார். ‘உன்னை அவர்களால் பிடிக்க முடியாது’ என்று சத்தமாகச் சொல்! அவர்கள் முகத்தில் அசடு வழியும்” என்றது. அதிலுள்ள சூதை அறியாத நரி வாயைத் திறந்து பேசவும், சேவல், தப்பிப் பறந்து ஒரு மரத்தின் மீது ஏறிக் கொண்டது.


வெட்கமடைந்த நரி வெகு தூரம் சென்ற பின்பு, சேவல் கீழே இறங்கியது. பின்பு, அது பண்ணைக்குத் திரும்பியதும், அதன் கர்வம் அடங்கி மற்ற பிராணிகளுடன் பணிவோடு பழக ஆரம்பித்தது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக