Thanjai

Thanjai

சனி, 19 மார்ச், 2011

கடி ஜோக்ஸ்

ஆங்கில ‘கடீஸ்’
30-01-1993 தினமலர் இதழில் வெளியானது



1.  குழந்தை மனமுள்ள எழுத்தாளர்    -       டால்ஸ்’டாய்’
2.  பணக்கார எழுத்தாளர்                  -       ‘கோல்ட்’ ஸ்மித்
3.  கனமான எழுத்தாளர்                    -       மில்’டன்’
4.  ஸ்டைலான எழுத்தாளர்               -       ஜேம்ஸ்’ஜீன்ஸ்’
5.  நீளமான எழுத்தாளர்                    -       ‘லாங்’பெல்லோ
6.  மகிழ்ச்சியான எழுத்தாளர்            -       ஸமுவேல் ‘ஸ்மைல்ஸ்’
7.  கொடூரமான எழுத்தாளர்              -       வர்ஜீனியா ‘வுல்ஃப்’
8.  போரஸை வென்ற எழுத்தாளர்    -       ‘அலெக்ஸாண்டர்’ டூமாஸ்
9.  உலர்ந்த எழுத்தாளர்                     -       ‘ட்ரை’டென்
10.   குளிர்ச்சியான எழுத்தாளர்         -       ராபர்ச்’ப்ராஸ்ட்’
11.   குலுங்கும் எழுத்தாளர்                -       ‘ஷேக்’ஸ்பியர்
12.   ஒலிம்பிக்ஸ் எழுத்தாளர்             -       ‘பென்’ஜான்சன்

சில ‘கார’மான ‘கடி’கள்
1. சாப்பாட்டின் வேறு பெயர்?                         -       ஆ’காரம்’
2. கர்வர்?                                                          -       அகங்’காரம்’
3. நாட்டிய பாவத்தில் ஒன்று?                          -       சிருங்’காரம்’
4. பிராமணர்கள் வாழும் தெரு?                        -       அக்கிர’காரம்’
5. தத்து எடுத்துக் கொள்வது?                           -       சுவீ’காரம்’
6. ஆலயத்தைச் சுற்றியுள்ளது?                          -       பிர’காரம்’
7. கட்டளை இடுவது?                                        -       அதி’காரம்’
8. மற்றவர் பொருளை எடுத்துக் கொள்வது?     -       அப’காரம்’
9. வண்டு எழுப்பும் ஒலி                                      -       ரீங்’காரம்’
10.   அழகு?                                                         -       ‘சிங்காரம்’
11.   அழகின்மை?                                                -       வி’காரம்’
12.   பிறருக்கு உதவுவது?                                    -       உப’காரம்’
13.   நேரத்தைக் காட்டுவது?                                -       கடி’காரம்’
14.   கற்கண்டைப் போன்ற தோற்றம் உடையது -      படி’காரம்’
15.   தோஷங்களை நீக்கச் செய்வது?                   -       பரி’காரம்’

மேலே உள்ள ‘கடி’ ஜோக்குகள் தினமலரின் வார பகுதியான ‘நகர் மலரில்’ வெளியானது. ஆனால் என்னுடைய பெயரை அதில் அவர்கள் வெளியிட தவறி விட்டார்கள். விடுவேனா நான்! உடனே வரைந்தேன் ஒரு மடல். இதோ அதையும் பிரசுரித்து விட்டார்கள்!
சார், கடந்த வார நகர் மலரில் என்னுடைய ‘கடீஸ்’ பிரசுரித்தற்கு நன்றி. ஏன் சார் என் பெயரை இருட்டடிப்பு செய்து விட்டீர்கள்?





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக