Thanjai

Thanjai

சனி, 19 மார்ச், 2011

கம்ப்யூட்டரில் வெளிநாட்டு மருமகள்!


மஞ்சுளா ரமேஷ் சினேகிதி ஜூலை, 2006 இதழில் வெளியானது!



என் மகன் வெளிநாட்டுப் பெண்ணை தன் வாழ்க்கைத் துணையாகத் தேர்ந்தெடுத்திருப்பதாகச் சொன்னபோது நான் சற்று அதிர்ந்தாலும், வெப்காம் முலமாக அவளைப் பார்த்தபோது "அம்மா! செளக்கியமா?" என்று கொச்சைத் தமிழில் அவள் பேசியபோது மனம் நெகிழ்ந்து விட்டேன். பின் நேரில் சென்று திருமணம் நடத்தி வைத்தபோது அவள் அழகு, அடக்கம், பண்பைக் கண்டு அவள் வேற்று நாட்டவளாக இருந்தாலும் சிறந்த பெண்ணையே என் மகன் தேர்ந்தெடுத்திருப்பது கண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தோம்.

இன்று என் பேத்தியின் நடையையும், சிரிப்பையும், பேச்சையும் பார்த்து மகிழும்போது, அவர்கள் நம் அருகில் இருப்பது போன்ற ஒரு சந்தோஷத்தை உணரமுடிகிறது. தினமும் இரவு ஒரு மணி நேரம் அவர்களுடனும், பேத்தியுடனும் பேசி, சிரித்து, மகிழ்வதால் கிடைக்கும் இன்பமே தனிதான்! என் இரண்டாவது மருமகளைத் தேர்ந்தெடுக்க எனக்கு துணை செய்ததும் இன்டர்நெட்தான்!




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக