Thanjai

Thanjai

திங்கள், 21 மார்ச், 2011

நாகாக்க

அவள் விகடன் ஏப்ரல் 13, 2001 இதழில் வெளியானது




குடும்பத்துடன் மகாபலேஷ்வருக்கு சுற்றுலா சென்றிருந்தோம். அதில் ஒன்றான ‘வில்சன் பாயிண்ட்’ மிக உயரமானது. நாங்கள் சென்ற சமயம் மழையாக இருந்ததாலும், ஆவல் மிகுதியில் பேசிக் கொண்டே ஏறினோம். எதிரில் ஒரு இளம் ஜோடி மிகவும் நெருக்கமாக தம்மை மறந்த நிலையில் கீழே இறங்கி வந்தனர். என் டீன் ஏஜ் மகன்களும், மகளும் அவர்களைப் பார்த்து தமிழில் ஜோக்கடிக்க, நாங்களும் சிரித்தபடியே ஏறினோம். இங்குள்ளோருக்கு தமிழ் தெரியாது என்பதால் நாங்கள் தைரியமாக ட்ம்மிழில் எதுவும் பேசுவதுண்டு! நாங்கள் மேலே சென்று சுற்றிப் பார்த்தவாறு, ‘இந்த பாயிண்ட் இருப்பவற்றிலேயே நல்ல உயரம்’ என்று பேசிக் கொண்டிருக்க, அந்த ஜோடி மேலே வந்தனர். அந்த இளைஞன் பட்டென்று, ‘இங்கு யாருமே இல்லாததாலதான் நாங்க பாதியிலேயே திரும்பிட்டோம். இப்ப நீங்க வந்த தைரியத்துல வந்தோம்’ என்றான். அவன் சுத்தமாக தமிழ் பேசியதைக் கேட்ட எங்கள் முகத்தில் ‘டன்’ கணக்கில் அசடு வழிந்தது! அது முதல் யாராயிருந்தாலும் நம்மொழி தெரியாது என நினைத்து எதையும் பேசக்கூடாது என்பதை புரிந்து கொண்டோம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக