Thanjai

Thanjai

ஞாயிறு, 20 மார்ச், 2011

வளம் தரும் மும்பை மகாலக்ஷ்மி

ஞான ஆலயம் நவம்பர் – 2001 இதழில் வெளியானது





மும்பை என்றதும் முதலில் நம் நினைவுக்கு வருவது மஹாலக்ஷ்மிதான். இங்கு கடற்கரையோரம் கோயில் கொண்டுள்ள தேவி மஹாலக்ஷ்மி மிகவும் வரப்ரசாதி. வணங்கியவர்களுக்கு செல்வத்தை வாரிவாரி வழங்கும் வள்ளல் என்று சொன்னால் மிகையில்லை.

இங்குள்ள மஹாலக்ஷ்மியின் சிலை கடலிலிருந்து கண்டெடுக்கப்பட்ட சுயம்பு உருவம். மஹாலக்ஷ்மி சிலை கடலில் புதைந்து கிடந்த சமயம் மும்பை தன் செல்வ வளம் குறைந்து இருந்ததாயும், சிலையைக் கண்டெடுத்து ஸ்தாபித்த பின்பே செல்வம் கொழிக்கும் பெரு நகரமாக மாறியதாகவும் கூறப்படுகிறது.

கோயில் நாள் முழுவதும் திறந்திருப்பதால் எந்த நேரமும் தரிசிக்க முடியும். வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகளில் கூட்டம் மிக அதிகமாக இருக்கும்.

மஹாலக்ஷ்மியின் இரு பக்கங்களிலும் மகாகாளியும், மகா சரஸ்வதியும் இணைந்து அருள் பாலிக்கும் அழகிய கோலம் காண்போரை மனம் மயக்க வைக்கும். மூன்று தேவியரும் இணைந்து அருள் தரும் இவ்வாலயத்தில் நவராத்திரி பத்து நாட்களும் விதவிதமான அலங்காரத்துடன், மிக விமரிசையாக கொண்டாடப் படுகிறது.


எந்த நேரமும் சர்வாலங்கார பூஷிதையாகக் காட்சி தரும் அன்னையை இரவு 9-30 மணிக்கு மேல் மட்டுமே சிலா ரூபத்தில் தரிசிக்க முடியும். செல்வச் செழிப்போடு விளங்கும் செல்வத்தின் அதிபதி, அங்கு செல்வோரையும் செல்வந்தராக்குவதில் வியப்பில்லை.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக