Thanjai

Thanjai

ஞாயிறு, 20 மார்ச், 2011

kitchen tips

சின்னச் சின்ன யோசனைகள்
பெண்மணி செப்டம்பர் 2002 இதழில் வெளியானது




1. காய்கறிகள், கீரை வேகும்போது ½ டீஸ்பூன் தேங்காயெண்ணை சேர்த்தால், காய்கறிகளின் சத்தும், நிறமும் போகாது.

2. அப்பம் செய்யும்போது அரிசி மாவுடன் சிறிதளவு வெண்ணை சேர்த்து செய்தால், அப்பம் மொறுமொறுவென்று நல்ல சுவையாக இருக்கும்.

3. கத்தரி, வாழை, உருளைக்கிழங்கு கறி செய்யும்போது ஒரு ஸ்பூன் பாலை விட்டால் கறுக்காது.

4. கத்தியில் எலுமிச்சை சாறு தடவிக்கொண்டு ஆப்பிள் பழத்தை நறுக்கினால் கறுக்காது.

சூப்பர் கிச்சன் டிப்ஸ்
குமுதம் சிநேகிதி செப்டம்பர் 2002 இதழில் வெளியானது



சமயலறை சிங்குகளை (sink) அலம்பு முன் காகித நேப்கின்களை அதன் கீழேயும் பக்கங்களிலும் வைத்து அதன் மேல் ப்ளீச்சிங் பவுடரை நீரில் கலந்து தெளித்து வைக்கவும். அரை மணி கழித்து நேப்கின்களை நீக்கி விட்டு பிரஷ்ஷினால் தேய்த்து அலம்பவும். இப்படிச் செய்வதால் எல்லா இடங்களிலும் ப்ளீச்சிங் பவுடர் பரவி அழுக்கு நன்கு நீங்கும்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக