Thanjai

Thanjai

வெள்ளி, 27 ஏப்ரல், 2012

குட்டீஸ் குறும்பு


குமுதம் சிநேகிதி இதழில் வெளியானது



குட்டீஸ் குறும்பு 

ரோட்டில ஜாமா

ஜெர்மனியில் இருக்கும் என் ஐந்து வயது பேத்தி ஸோஃபியா ரொம்ப ஸ்மார்ட்டாக இருப்பாள். எல்லாவற்றிற்கும் விளக்கம் கேட்பாள். இந்த வயதிலேயே ஓவியம், கைவேலை, பெயிண்டிங், தையல் என்று பார்த்ததை அப்படியே செய்வாள். நாங்கள் ஒரு நாள் காரில் வெளியில் சென்று கொண்டிருந்தோம். ட்ரேஃபிக் ஜாமாகி 15 நிமிடங்களாகியும் சரியாகவில்லை. "ஏன் கார் எல்லாம் அப்படியே நகராமல் நிற்கிறது?" என்று என் மகனைக் கேட்டாள். அவன் "ட்ரேஃபிக்கினால் ரோட் ஜாம் ஆகி விட்டது" என்றான். உடனே அவள் "ரோட் ஜாம் ஆனால் நல்லதுதானே? கார் வழுக்கிக் கொண்டு போகுமே?" என்று சாப்பிடும் ஜாமை மனதில் வைத்துக் கேட்க நாங்களெல்லாம் சிரித்து விட்டோம். குழந்தைகளின் சிந்தனைகளில்தான் எத்தனை எத்தனை சுவாரசியங்கள்!




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக