அழகே உருவாய்
ஸ்ரீமாவுலம்மன்...
தீபம் 5.1.2014 இதழில்
வெளியானது
நம் நாட்டில் எல்லை தெய்வங்கள் மாரியம்மன் , பொன்னியம்மன்,
காளியம்மன், மதுரை வீரன் என்ற பெயர்களில் எல்லா கிராமங்களிலும்
அருள் பாலிப்பார். அந்த எல்லை தெய்வங்களே
தீய சக்திகளில் இருந்தும்,
கொடிய நோய்களில் இருந்தும்
நம்மைக் காப்பாற்றும்
என்பது நம் நம்பிக்கை. சமீபத்தில் ஆந்திரா
சென்றிருந்த சமயம் பீமாவரம்
என்ற ஊரில் தரிசனம் தரும் மாவுலம்மா என்ற தேவியின் ஆலயம் சென்றிருந்தேன்.
இவ்வாலயத்தில்
வானளாவ உயர்ந்து பிரம்மாண்டமாகக் காட்சியளித்த தேவியைக் கண்டு பிரமித்து விட்டேன்.ஜகன்மாதாவாக
, காளிதேவியாகக் காட்சியளிக்கும்
காவல் தெய்வம் மாவுலம்மா தேவி அங்கு கோயில் கொண்டது எப்படி?
கி.பி.1200ல் இந்த அம்மன் தோன்றியதாகக் கூறப்பட்டாலும் , பீமாவரத்தில் அரசமரம் மற்றும் வேப்பமரங்களுக்கு கீழே காட்சியளித்த அம்மன் கி.பி. 1880லிருந்தே மக்கள் வழிபட தன்னை வெளிக் காட்டிக் கொண்டாள் அவ்விடத்தில் மாமரங்கள் நிறைந்திருந்ததால் 'மாமில்ல அம்மா' (மாமில்ல என்பது மாமரம்) என்று அழைக்கப்பட்டாள். சுற்றியுள்ள கிராம மக்கள் இத்தேவியை தங்கள் குல தேவதையாகக் கொண்டதால் 'மா உள்ளம்மா' (எங்கள் சொந்த அம்மன்) என்ற பெயர் பெற்றதாகக் கூறுகிறார்கள்.
.
1880ம் வருடம் வைகாசி மாதத்தில் மாறல்ல மச்சி ராஜு மற்றும் கிராந்தி அப்பண்ணா ஆகியோரின் கனவில் தோன்றிய அன்னை தான் இருக்குமிடம் கூறி தனக்கு ஆலயம் கட்டும்படி சொல்ல, அவர்களும் தேவியைக் கண்டெடுத்து ஒரு சிறு குடிசை அமைத்து வழிபட்டு வந்தனர். பின்பு அவ்வூரின் கடைத்தெருவில் ஒரு ஆலயம் அமைத்து வழிபட்டனர். அம்மனின் அற்புத லீலைகளும், அளப்பரிய கருணையும் பெற்ற பலரும் அத்தேவியை தங்கள் குல தெய்வமாக வணங்க ஆரம்பித்தனர். தேவியின் பெருமை சுற்றியுள்ள கிராமங்களுக்கும் பரவலாயிற்று.
1910ம் ஆண்டு வெள்ளத்தில் தேவியின் உருவம் சிதைந்தபோது கிராந்தி அப்பாராவ் என்ற சிற்பியால் முன்பிருந்த மூர்க்கமான உருவம் மாற்றப்பட்டு தற்போது அருள் தரும் சாந்தி ரூபமாக வடிக்கப்பட்டது.அழகிய கோபுரத்துடன் காட்சியளிக்கும் ஆலயத்தில் எப்பொழுதும் மக்கள் கூட்டம் நிரம்பியிருக்குமாம். தென்னிந்திய பாணியில் அமைந்துள்ள ஆலயத்தினுள் தேவியின் பல வடிவங்கள் வண்ணமயமாகக் காட்சி தருகிறது.

அன்னையின் சந்நிதிக்கு செல்வோம். அற்புதமான,
மனத்தைக் கொள்ளை கொள்ளும்
அழகிய , அருள் பொழியும் திருவுருவம். பத்து அடி உயரத்தில் பளபளப்பும்,
தகதகப்புமாக இடக்கால் மடித்து, வலக்காலை தொங்கவிட்டு நெடிதுயர்ந்து காட்சி தரும் தேவியின் நான்கு கரங்களில்
சூலம், உடுக்கை, வாள் , கலசம் என்று
தன்னை அண்டி வந்தாரைக்
காக்கும் முகமாகக் காட்சி
தருகிறாள். அத்தனையும் பொற் கவசங்களால்
மின்னுகிறது!விசே ஷ நாட்களில் 24 கிலோ
தங்கம், 274 கிலோ வெள்ளி
மற்றும் வைரத்தால் ஆபரணங்கள்
பூண்டு 65 கிலோ தங்கப் புடவை அணிந்து
அற்புதமாகக் காட்சி தருவாள். ஆந்திராவின் செல்வம் நிறைந்த
ஆலயங்களுள் இவ்வாலயமும் ஒன்றாம். விரிந்த நயனங்களும், வரம் தரும் கருணைக்
கரங்களுமாக எழிலாகக் காட்சி தரும் அன்னையைக்
காணக் கண்கோடி வேண்டும். அவளது காருண்யம் நம்மைக் கட்டிப்போட்டு அங்கிருந்து நகர
முடியாமல் செய்கிறது.
வரப்பிரசாதியான
அன்னையிடம் முறையிடும் வேண்டுதல்கள் விரைவில் நிறைவேறுவதால் மக்கள் தேவியை அண்டி வந்து
பிரார்த்தனைகளை செலுத்துகின்றனர். நாம்
அர்ச்சனைக்கு கொடுத்தாலும்,
இல்லாவிடினும் ஆலயத்திற்கு தரிசனத்திற்கு
வரும் அனைத்து பக்தர்களின் பெயர், கோத்திரம்,
நட்சத்திரம் கேட்டு அர்ச்சகர்கள் பொறுமையாக பூஜிக்கும் முறை ஆந்திராவின்
அத்தனை ஆலயங்களிலும் நான் கண்ட அதிசயம்.
ஆலயத்தில் தினமும் பிராதகால பூஜை,
குங்குமார்ச்சனை ,வேத பாராயணம், சகஸ்ரநாமம் , அன்னதானம்
ஆகியவை தவறாது நடைபெறுகிறது.
அன்னையின் அருளால் அவ்வூர் மிகச்
செழிப்புடனும், வளத்துடனும்
கல்வி, தொழில், அனைத்திலும்
சிறப்புற்று விளங்குவதாக அவ்வூர் மக்கள் பக்தியுடன்
கூறுகிறார்கள். மக்களின் எல்லாக்
குறைகளையும் அன்னை உடனே களைந்து
அவர்களின் வாழ்வை இனிதாக்குகிறாள் .
இங்கு ஆனி மாதம் பௌர்ணமி அடுத்து வரும் பிரதமையிலிருந்து கிட்டத்தட்ட ஒரு மாதம் திருவிழா மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. ஜனவரி மாதம் சங்கராந்தியின் போது 40 நாட்கள் ஆண்டு உத்சவம் கொண்டாடப் படுகிறது. நவராத்திரியில் லக்ஷகுங்குமார்ச்ச்சனா, மற்றும் சண்டி ஹோமம் நடைபெறும். ஆடி, தை பௌர்ணமி மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அன்னை அழகிய அலங்காரத்தில் காட்சி தருவாள்.
மேற்கு கோதாவரி மாவட்டத்தில் அமைந்துள்ள இவ்வாலயம் பீமாவரத்தில், விஜயவாடாவிலிருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. சிவபெருமானின் பஞ்சராம தலங்களில் ஒன்றான ஸ்ரீசோமேஸ்வர சுவாமி கோயில் கொண்டிருக்கும் பீமாவரம் செல்பவர்கள் ஸ்ரீமாவுலம்மனையும் தரிசித்து அருள் பெருக.