Thanjai

Thanjai

திங்கள், 30 ஏப்ரல், 2012

ந்யூஷ்வான்ஸ்டெயின் - ஃபேரிடேல் கேஸல்

ந்யூஷ்வான்ஸ்டெயின் - ஃபேரிடேல் கேஸல்

ஏப்ரல் 1-15 குமுதம் சிநேகிதி இதழில் டூர் ஸ்பெஷல் பகுதியில் வெளியானது


பிரசுரிக்கப்பட்ட செய்தியைத் தவிர கூடுதலான விபரங்களையும் இக்கட்டுரையில் இணைத்துள்ளேன்.

இம்முறை ஜெர்மனி  சென்ற  என்னிடம்  என்  மருமகள்  'ஒரு  அற்புதமான  கோட்டைக்கு  செல்வோம்மாஎன்ற  போது,  'என்ன  சாதாரண  கோட்டையாகத்தான்  இருக்கும்என்று  எண்ணியபடிதான்  சென்றேன்.  அந்தக்  கோட்டையை  பார்த்தபின் தான்  'அது  அற்புதம்  மட்டுமல்ல  அதிசயமும்  கூடஎன்று  உணர்ந்தேன்!  அந்த  அழகுக்  கோட்டையைப்  பற்றி  நீங்களும்  தெரிந்து  கொள்ளுங்களேன்! 




ஜெர்மனியில்  கலையழகும்காதல்  உணர்வும்  மிக்க  அழகிய  அருமையான  ஃபேரிடேல்  கேஸல்  என்னும்  தேவதைகளின்    கோட்டைகளில்  ந்யூஷ்வான்ஸ்டெயின்  கோட்டையும்  ஒன்று.  ந்யூஷ்வான்ஸ்டெயின்  என்பதற்கு  'புதிய  அன்னப்பறவையின்  கோட்டைஎன்பது  பொருள்!






கலைகளில்  அளவுக்கு  அதிகமான  கலை ஆர்வம்  கொண்ட  லுக்விக்  என்ற  மன்னனால்  கட்டப்பட்ட  இக்கோட்டையின்  கட்டமைப்பும்உள்ளே  அமைக்கப்பட்டுள்ள  வசதிகளும்  நம்மை  வாய்  பிளக்க  வைக்கின்றன. ஜெர்மனியில்  பவேரியா  என்ற  இடத்தில்ஆல்ப்ஸ்  மலைத்தொடரில்ஒரு   சிறிய  குன்றின்  மேல்  அமைந்துள்ளது  இவ்வழகிய  கோட்டை!  ஒபேராவின்  பல  நாடகங்களை உருவாக்கிய  உலகப்புகழ்  பெற்ற  ரிச்சர்ட்  வாக்னர்  என்பவரின்  கதாபாத்திரங்களை  கவினுறும்  ஓவியங்களாக்கி  இதனை  உருவாக்கிய  அந்த  மன்னர்  இம்மாளிகையில்  வாழ்ந்தது  வெறும்  ஆறு  மாதங்கள்  மட்டுமேயாம்!

நாட்டு  விஷயங்களில்  ஈடுபாடின்றிவேறு  எந்த  எண்ணமுமின்றி  இக்கோட்டையை  உருவாகுவதிலேயே  கழித்த  அவரை   (Mad King)  பைத்தியக்கார  அரசன்  என்கிறது  வரலாறு! 

அந்நாளில்   பாதுகாப்புக்காக  அன்றிஅந்நாட்டின்  கலைகலாசாரம்  பற்றி  எல்லா  நாட்டினரும்  அறியவே  இது  போல்  ஃபேரிடேல்  கோட்டைகள்  கட்டப்பட்டதாக  சொல்கிறது  சரித்திரம்!

வெண்மையும்சிவப்பும்  கலந்த  உயர்ரகக்  கற்களினால்  கட்டப்பட்ட  இக்கோட்டையின்  அழகு  அதன்  புதிது  போன்ற  தோற்றத்திலும்நெடிது  உயர்ந்த  உருவத்திலும்கோபுரம் போன்று  அமைந்த  தூண்களிலும்  மனதை  அள்ளுகிறது.   1869ல்  மூன்று  ஆண்டுகளில்  கட்டி  முடிக்க  திட்டமிடப்பட்ட  இக்கோட்டை,  1886ல்  லுட்விக்  மன்னர்  எதிபாராமல்  இறக்கும்வரை  முற்றுப்பெறாமலே  இருந்தது.

அதனை  மேலும்மேலும்  அலங்கரிப்பதிலேயே  தன்  வாழ்நாளைச்  செலவழித்த  அரசன்அதில்  அமர்ந்து  ஆட்சி  செய்யாமலே  போனது  வருத்தமான  கதை!  அதற்காக  அவர்  பார்த்துப்  பார்த்து  கட்டிய  சிம்மாசன  அறையில்   சிம்மாசனம்  இல்லாதது  மனதை  என்னவோ  செய்கிறது.  14  அறைகள்  முடிவுற்ற  நிலையில்,    அது  கட்டப்பட்ட  அதே  நிலையிலேயே பராமரிக்கப்படுகிறது.இனி  உள்ளே  செல்வோமா!  நம்மைச்  சுற்றிக்காட்ட  ஒவ்வொரு  மொழி  வழிகாட்டிகளும்  உள்ளனர்.  அவர்கள்  அத்தனை  இடங்களையும்  பற்றி  சொல்லியபடி  அழைத்துச்  செல்கின்றனர்.


கோட்டையின்  உள்ளே  செல்லச்  செல்ல  அதன்  பிரம்மாண்டம்  நம்மை  அசர  வைக்கிறது. இரண்டாம்  தளத்திலுள்ள  சிம்மாசன  அறை. ' அற்புதம்  ஆஹா...என்ன  அழகுஎன்று  நம்மை  பிரமிக்க  வைக்கிறது.  மூன்றாம்  தளம்  முழுதும்  அவருக்குப்  பிடித்த  ஒபேரா  நாடகக்  காட்சிகள்  அணிவகுத்து  உயிரோவியமாகக் காட்சியளிக்கின்றன.

அரசரின்  படுக்கை  அறை  முழுதும்  வண்ண  மயமான  காதல்  ஓவியங்கள்!  படுக்கையின்  அழகு  நம்மையே  சற்று  'படுத்துப்  பார்ப்போமா?'  என்று  எண்ண  வைக்கிறது!  இந்த  அறையை  மட்டும்  14  தச்சர்கள்  41/2  ஆண்டுகள்  உருவாக்கினராம்!  என்னே  அவரின்  ரசனை!

ஆட்சி  செய்வதில்  விருப்பமில்லாத  லுட்விக்  மற்ற  கேளிக்கைகளில்  அதிக   ஆர்வம்  கொண்டு  அமைத்துள்ள  'சிங்கர்  ஹால்உலகின்  சிறந்த  பாடகர்களின்  ஆளுயர  ஓவியங்களுடன்  காணப்படுகிறது.  இந்தக்  கோட்டை   முழுதும்  உள்ள  தொங்கு  விளக்குகளின்  அழகை  என்ன  சொல்வதுஒவ்வொன்றும்  ஒவ்வொரு  விதம்!

இவற்றோடு    சாப்பிடும்  அறைசமையல்  அறைபடிக்கும்  அறை  என்று  ஒவ்வொன்றையும்  பார்க்கப்  பார்க்க  நாம்  நிஜமாகவே  ஒரு  தேவதையின்  அரண்மனைக்குள்  வந்த  உணர்வு  எழுகிறது. அத்தனை  அறைகளிலும்  தண்ணீர்  வசதிவென்னீர்  குழாய்கள்கழிவறைகளில்  தானியங்கி  தண்ணீர்க்  குழாய்கள்  என்று  அதி  நவீன  தொழில்  நுட்பங்கள்  ஆச்சரியப்  படுத்துகின்றன!

இங்குள்ள  குளிர்கால  தோட்டம் மற்றும்  ஒரு  அழகான  குகை  இவற்றைக்  காணும்போது  'சொர்க்கமா  இதுஎன்று  வாய்  பிளக்க  வைக்கிறது!  இத்தனை   வசதிகளோடும்கலை  அமைப்போடும்  இன்று  காட்சியளிக்கும்  இந்தக்  கோட்டையைக்  காண ஆண்டு  தோறும்  11/2  லட்சம்  சுற்றுலாப்  பயணியர்  வருகின்றனராம்!


இந்தக்  கோட்டையின்  அமைப்பை  மாதிரியாகக்  கொண்டே  அமெரிக்காவின்   டிஸ்னிலேண்டில்  உள்ள  ஸ்லீப்பிங்  ப்யூடி  கேஸிலை  உருவாக்கினராம்!

கோட்டையைச்  சுற்றிப்  பார்க்க  கட்டணம்  10  யூரோக்கள்.  கீழிருந்து  3  கிலோமீட்டர்  உயரம்  ஏறிச்  செல்ல  வேண்டும்.  குதிரை  வண்டிகளும்  செல்கின்றன.

குளிர்  காலத்தில்  வெண்பனி  மூடிய  தோற்றத்தில்  ஆல்ப்ஸ்  மலைகளின்  இடையே  காணும்போது  இந்தக்  கோட்டை  வெள்ளி  மாளிகையாய்  ஜொலிப்பதை  வாழ்வில்  மறக்கவே  முடியாது!

ஜெர்மனி  செல்பவர்கள்  கண்டிப்பாக  கண்டு  களிக்க  வேண்டிய  ஃபேரிடேல்  கேஸில்  இது!! 




வெள்ளி, 27 ஏப்ரல், 2012

சீஸ்-பொட்டேடோ டிகியா


டிகியா டிக்கடியா



சீஸ்-பொட்டேடோ டிகியா
அவள் விகடன் மே 8, 2012 அவள் விகடன் இதழில் வெளியானது
ஆச்சி மசாலா வழங்கும் வாசகிகள் கைமணம் பகுதி 






தேவையானவை:

வேகவைத்து மசித்த உருளைக் கிழங்கு--1 கப்,
பச்சைமிளகாய்--4,
மஞ்சள்தூள், கரம்மசாலா --தலா அரை டீஸ்பூன்,
சீஸ்--சில துண்டுகள்,
பொடியாக சீவிய முந்திரி, பிஸ்தா (கலந்தது)--இரண்டு டேபிள்ஸ்பூன்,
எண்ணெய்,உப்பு-- தேவையான அளவு.

செய்முறை :

மசித்த உருளைக் கிழங்குடன் பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய், உப்பு, மஞ்சள்தூள் , கரம்மசாலா தூள் சேர்த்து கட்டியில்லாமல் நன்கு பிசையவும். அதிலிருந்து கொஞ்சம் எடுத்து சிறு உருண்டையாக உருட்டி, நடுவில் குழியாக்கி அதில் சிறிய சீஸ் துண்டு வைத்து,அதன்மேல் பொடியாக சீவிய முந்திரி, பிஸ்தா தூவி நன்கு மூடி விடவும். இதேபோல் ஒவ்வொரு உருண்டையும் தயார் செய்யவும். கடைசியில் எண்ணையைக் காய வைத்து உருட்டி வைத்திருக்கும் உருண்டைகளைப் போட்டு பொன்னிறமாக வெந்ததும் எடுத்து சாஸ் அல்லது சட்னியுடன் பரிமாறவும்.