Thanjai

Thanjai

வெள்ளி, 27 ஏப்ரல், 2012

சீஸ்-பொட்டேடோ டிகியா


டிகியா டிக்கடியா



சீஸ்-பொட்டேடோ டிகியா
அவள் விகடன் மே 8, 2012 அவள் விகடன் இதழில் வெளியானது
ஆச்சி மசாலா வழங்கும் வாசகிகள் கைமணம் பகுதி 






தேவையானவை:

வேகவைத்து மசித்த உருளைக் கிழங்கு--1 கப்,
பச்சைமிளகாய்--4,
மஞ்சள்தூள், கரம்மசாலா --தலா அரை டீஸ்பூன்,
சீஸ்--சில துண்டுகள்,
பொடியாக சீவிய முந்திரி, பிஸ்தா (கலந்தது)--இரண்டு டேபிள்ஸ்பூன்,
எண்ணெய்,உப்பு-- தேவையான அளவு.

செய்முறை :

மசித்த உருளைக் கிழங்குடன் பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய், உப்பு, மஞ்சள்தூள் , கரம்மசாலா தூள் சேர்த்து கட்டியில்லாமல் நன்கு பிசையவும். அதிலிருந்து கொஞ்சம் எடுத்து சிறு உருண்டையாக உருட்டி, நடுவில் குழியாக்கி அதில் சிறிய சீஸ் துண்டு வைத்து,அதன்மேல் பொடியாக சீவிய முந்திரி, பிஸ்தா தூவி நன்கு மூடி விடவும். இதேபோல் ஒவ்வொரு உருண்டையும் தயார் செய்யவும். கடைசியில் எண்ணையைக் காய வைத்து உருட்டி வைத்திருக்கும் உருண்டைகளைப் போட்டு பொன்னிறமாக வெந்ததும் எடுத்து சாஸ் அல்லது சட்னியுடன் பரிமாறவும்.


1 கருத்து:

  1. ஹாய் ராதாம்மா,
    டிகியா பார்க்கும் போதே சாப்பிட தூண்டுது. பேர் வித்தியாசமா இருக்கு.. குட் ரெசிபி. -பாக்கியலட்சுமி

    பதிலளிநீக்கு