Thanjai

Thanjai

திங்கள், 28 மார்ச், 2011

திரு நீறு அணியும் முறை

பக்தி – மே, 2001 இதழில் வெளியானது



‘நீரில்லா நெற்றி பாழ்’ என்பது நாம் அறிந்ததே. சைவர்கள் திருநீறும், வைணவர்கள் திருமண்ணும் அவசியம் நெற்றியில் அணிதல் வேண்டும்.

பசுவின் சாணத்தை அக்னியால் சுடுவதால் உண்டாவது நீறு. இறுதியில் மனிதன் சாம்பலாகிப் போவதைக் குறிப்பதே நீறு பூசுவதன் பொருள்.

விபூதியைப் பட்டுப்பை அல்லது சம்புடத்தில் வைத்து, வடக்கு – கிழக்கு திசை நோக்கி தரித்தல் வேண்டும். விபூதி நிலத்தில் சிந்துவது பாவம், ‘சிவ சிவ’ அல்லது ‘ஓம் நமசிவாய’ என்று சொல்லியபடி வலக்கையில் நடுவிரல் மூன்றாலும் நெற்றியில் இடுதல் வேண்டும். நடந்து கொண்டும் விபூதி தரிக்கக் கூடாது.

உறங்கு முன்பு, உறங்கி எழுந்த பின்பு, சூரியன் உதிக்கும் நேரம், அத்தமிக்கும் நேரம், குளித்த பின்பும, சாப்பிடும் முன்பும், சாப்பிட்ட பின்பும் விபூதி அவசியம் தரிக்க வேண்டும்.

நெற்றியில் இரண்டு புருவ எல்லை வரையும், விபூதி தரிக்க வேண்டும். கூடுவதோ, குறைவதோ பாவம். மூன்று பட்டைகளாக இடும்போது ஒன்றை ஒன்று தொட்டுக் கொண்டிருக்கக் கூடாது.

திருமணமாகாத பெண்கள் விபூதி பிரஸாதத்தை கழுத்தில் பூச வேண்டும். இதனால் கழுத்தில் மாங்கல்யம் அணியும் பாக்கியம் ஏற்படும்.


திருமணமான பெண்கள் குங்குமத்திற்கு மேல் நெற்றியில் திருநீறு வைக்கலாம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக