Thanjai

Thanjai

திங்கள், 28 மார்ச், 2011

விளக்கே! திருவிளக்கே!

ஞான ஆலயம் – அக்டோபர் 1999 ல் வெளியானது
தீபம் ஏற்றும் எண்ணெயும்,
அதன் பலன்களும்





நெய் விட்டு தீபம் ஏற்றுவது மிகச் சிறப்பு. அது சகலவித சுகங்களையும், வீட்டிற்கு நலனையும் தருகிறது.

தினமும் நெய்யில் தீபம் ஏற்றுவது சாத்தியமில்லையாதலால்,
அடுத்தபடியாக நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவது நலம். இதனால் எல்லா பீடைகளும் நீங்கி சுபிட்சம் ஏற்படும்.

விளக்கெண்ணெய் தீபம் ஏற்றினால் புகழ், வாழ்வில் சுகம், உறவினர் ஒற்றுமை, தாம்பத்திய சுகம் விருத்தியாகும்.

இலுப்ப எண்ணெயில் தீபம் ஏற்றினால் வீட்டுக்கு நலம் உண்டாகும்.

கடலெண்ணெயில் தீபமேற்றினால் கடன், துக்கம், பயம், பீடை இவை சேரும். எனவே கடலெண்ணெயில் தீபம் ஏற்றுவது கூடாது.

திரிவகை மற்றும் பயன்கள்

தீபத்திற்கு பஞ்சுத் திரியிடுவது நன்று.

தாமரைத் தண்டுத்திரி முன்வினை பாவம் நீக்கும். செல்வம் பெருகும்.

வாழைத்தண்டு நூலைப் பக்குவப்படுத்தி திரியிட பிள்ளைச் செல்வம் உண்டாகும். தெய்வ குற்றம், குடும்ப சாபம் நீங்கும்.

வெள்ளெருக்கன் பட்டையைத் திரியாக்கி தீபமேற்றினால் பெருத்த செல்வம் உண்டாகும்.

புது மஞ்சள் துணி திரித்து தீபமேற்றினால் அம்மன் அருளால் பேய், காற்று, கருப்பு அகலும், நோய்கள் நீங்கும்.

சிவப்புத் துணித் துண்டில் விளக்கேற்றினால் திருமணத் தடை, மலடு, பைசாச செய்வினை தோஷம் விலகும்.

புது வெள்ளை வஸ்திரத்திரியில் ஏற்றினால், வீட்டுக்கு நலன்கள் ஏற்படும்.

தீபமேற்றும் திசைகளும், பயன்களும்

கிழக்கில் தீபமேற்றி வழிபட துன்பம், கிரக பீடை அகலும்.

மேற்கில் கடன் தொல்லை, சனி தோஷம், உறவினர் பகை நீங்கும்.

வடக்கில் தீபமேற்ற திரண்ட செல்வமும், சர்வ மங்களமும் உண்டாகும். திருமணத் தடை, கல்வித் தடை நீங்கும்.

தெற்கில் தீபமேற்றுவது பெரும் பாவம், அபசகுனம்.

இறைவனுக்கு உகந்த எண்ணெய்

மகாலட்சுமிக்கு நெய் விளக்கு ஏற்றித் தினமும் மாலை வேளையில் வழிபட்டால் நல்ல வேலை கிடைக்கும். மனதிற்கினிய துணையுடன் திருமணம் நடக்கும். புத்திர ப்ராப்தி கிடைக்கும்.

நாராயணனுக்கு நல்லெண்ணெய் விளக்கேற்றுவது உசிதம்

கணபதிக்கு தேங்காயெண்ணெய் தீபம்.

ருத்திரம்-பதி தேவதைகளுக்கு இலுப்பெண்ணெய் நலம்.

நெய், விளக்கெண்ணெய், வேப்பெண்ணெய், இலுப்பெண்ணெய், தேங்காயெண்ணெய் ஐந்தும் சேர்ந்து விளக்கேற்றி தேவிக்குப் பூஜை செய்தால் நினைத்த காரியம் கைகூடும்.

சர்வ தேவதைகளுக்கு நல்லெண்ணெய் விளக்கேற்றி வழிபடுவது நலம்.

விளக்கு முகம்

ஒரு முகம் ஏற்றுவது மத்தியமம்.

இரண்டு முகம் குடும்ப ஒற்றுமை.

மூன்று முகம் ஏற்றுவது புத்திர சுகம் தரும்.

நான்கு முகம் ஏற்றுவது பசு, பரி இனத்தைத் தரும்.

ஐந்து முகம் செல்வம் பெருகும்.

மண் அகல், வெள்ளி, பஞ்சலோக விளக்குகள் பூஜைக்கு மிகவும் உகந்தது.

தீபமேற்றும்போது கீழ்க்கண்ட சுலோகங்களைச் சொல்லி ஏற்றுவது நல்லது:
சுபம் பவது கல்யாணீ
ஆரோக்யம் புத்ர சம்பதாம்
மமதுக்க வினாசாய தீபலக்ஷ்மீர் நமோஸ்துதே!
தீபரூபினி தேவேசி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே!
ஸௌமங்கள்யம்ச பாக்யம்த்வம் தேஹிமே தய்யாசுபே!




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக