Thanjai

Thanjai

புதன், 23 மார்ச், 2011

எங்க பேட்டை பிள்ளையார்

குமுதம் பக்தி ஸ்பெஷல் – மார்ச்சு, 2002 இதழில் வெளியானது
டிட்வாலா மஹாகணபதி





மும்பையிலிருந்து நாசிக் செல்லும் வழியில் டிட்வாலாவில் கோயில் கொண்டிருக்கும் ‘மகாகணபதி’, கேட்ட வரம் தருவதால் ‘வர கணபதி’யாகப் போற்றப்படுகிறார். இங்குள்ள கணபதி சிலை கண்வ முனிவரால் ஸ்தாபிக்கப்பட்டது; பல நாட்கள் பிரிந்திருந்த சகுந்தலையும், துஷ்யந்தனும் இணைந்தது இங்குதான்; அவர்கள் திருமணமும் இவ்விடத்திலேயே நடந்தது என்றும் கூறப்படுகிறது. இங்கு பக்தியோடு வழிபட்டால் விரும்பியவர்களையே மணக்கும் வரத்தை விக்னேசுவரர் அருள்வார் என்று நம்பப்படுவதால் இங்கு எப்போதும் இளவயதினர் கூட்டம் அதிகம்! பிரிந்த தம்பதிகள் இணையவும், பிள்ளைப் பேறு இல்லாதோர் அந்தப் பேறு பெறவும் இந்த விநாயகரை வழிபடுகிறார்கள். அழகிய அலங்காரத்துடன் கூடிய விநாயகருக்கு தினமும் இருவேளை ஆரத்தி உண்டு. சங்கடஹர சதுர்த்தி நாட்களில் நாள் முழுதும் ஆலயம் திறந்திருப்பதுடன், விசேஷ அலங்காரங்களுடன் காட்சி தரும் கணபதியை தரிசிக்க குறைந்தது ஆறு மணி நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டும். கேட்டவர்க்கு கேட்டபடி வரம் தரும் வக்ரதுண்டன் மும்பயின் ‘செல்லப் பிள்ளை’யாக விளங்குகிறார். மும்பை விக்டோரியா டெர்மினஸிலிருந்து டிட்வாலா செல்ல மின் ரயில் வசதி உண்டு.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக