Thanjai

Thanjai

புதன், 23 மார்ச், 2011

பஞ்சவர்ணக் கூட்டு

குமுதம் சிநேகிதி மெகா சமையல் போட்டியில் 2 ஆம் பரிசு பெற்றது.



தேவையான பொருட்கள்:
பீர்க்கங்காய் – 4
வெள்ளரிக்காய் – 2
பூசணி -1
சிறிய பரங்கி – 1
சிறிய பத்தை கத்தரி – 2
பட்டாணி (உரித்தது) – 1 கப்
பெரிய வெங்காயம் – 2
கடுகு – 1 டீஸ்பூன்
பெருங்காயம் - ¼ டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எலுமிச்சை - ½

அரைத்துவிட:
துருவிய தேங்காய் - ½ கப்
பச்சை கொத்துமல்லி - ½ கப்
மஞ்சள் பொடி - ½ டீஸ்பூன்
காரப்பொடி – 1 டீஸ்பூன்
கரம் மசாலா - ½ டீஸ்பூன்

வெந்தயக் கீரை (ஆய்ந்து நறுக்கியது) - ½ கப்
கடலை மாவு - ¼ கப்

குணுக்கிற்கு:
அரிசி மாவு – 4 டீஸ்பூன்
இஞ்சி, பச்சை மிளகாய் விசுது – 1 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் – தேவைக்கு

செய்முறை:
காய்கறிகள் மற்றும் வெங்காயத்தை சிறிதாக நறுக்கி பிசறி வைக்கவும். 15 நிமிடம் கழித்து, ஒட்டப் பிழிந்து கீரையை தனியே எடுத்துக் கொள்ளுங்கள். அத்துடன் மேலே குணுக்கிற்குக் கூறிய சாமான்களைச் சேர்த்து நன்கு பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக எடுத்துக் கொள்ளவும்.


பாத்திரத்தில் நான்கு டீஸ்பூன் எண்ணெய் விட்டுப் பெருங்காயம் போட்டுப் பொரிந்ததும் கடுகு போடவும். கடுகு வெடித்ததும், நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கியதும், மற்ற காய்கறிகளைப் போடவும். ஒரு கை தண்ணீர் தெளித்து அடுப்பை சிறியதாக வைத்து, ஒரு தட்டால் மூடி வேகவிடவும். எல்லாமே எளிதில் வேகும் காய்கறிகளாதலால் பத்தே நிமிடத்தில் வெந்து விடும். நன்கு வெந்ததும் அதில் அரைத்த மசாலா, உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். எல்லாம் நன்கு சேர்ந்து கொண்டதும் வெந்தயக் கீரை குணுக்குகளைச் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும். பச்சை கொத்துமல்லி, கறிவேப்பிலை கிள்ளிப் போடவும். இது சாதத்துடனும், சப்பாத்தியுடனும் சாப்பிட மிக ருசியாக இருக்கும். அதிக காரமில்லாத, சத்தான, வெயில் நாளுக்கு ஏற்ற உணவு வகை இது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக