சமயக் குரவர் நால்வருள் ஒருவரான
திருஞான சம்பந்தப் பெருமானால் பாடல் பெற்ற தலமாகிய ஆடுதுறை பெருமாள் கோயில்
என்னும் சிவாலயம் கும்பகோணம்-திருவையறு சாலையில் உள்ளிக் கடை என்னும் ஊரையடுத்து உள்ளது.
குடந்தையிலிருந்து 20 கி.மீ., திருவையாற்றிலிருந்து 5 கி.மீ.
இறைவனின் பெயர் – த யாநிதீசுவரர்.
இறைவி – அழகு சடைமுடியம்மை. தல மரம் – தென்னை.
ஒரு கர்ப்பிணிப் பெண்ணின் தாகம்
தீர்க்க ஈசன் தென்னங்குலையை வளைத்துக் கொடுத்ததால் குலை வணங்கீசர் என்றும்,
சுக்ரீவனின் தமையன் வாலியும், சிட்டுக் குருவி ஒன்றும் இந்த இறைவனை வழிபட்டு பேறு
பெற்றமையால் சிட்டுலிங்கேசர் மற்றும் வாலி நாதர் என்றும் பெயர்கள் உண்டு. இங்குள்ள
விமானத்தில் வாலி வழிபடும் சிற்பமும், தலவரலாறான கர்ப்பிணி செட்டிப் பெண்ணின்
உருவமும் அமைந்துள்ளது. கோயில் கோஷ்டத்திலுள்ள அர்த்த நாரீசுவர வடிவம் மிக அழகாக
கண்ணுக்கு பெருவிருந்தாய் திகழ்கிறது. மேலும் கற்சிலையாலான நடராஜர், சிவகாமியுடன்
மூலவராகக் காட்சியளிப்பது எந்த ஆலயத்திலும் இல்லாத சிறப்பு.
ஐந்து நிலைகளைக் கொண்ட
ராஜகோபுரத்துடன் விளங்கும் இவ்வாலயம் மிகவும் சிதிலமடந்தும், பராமரிப்பின்றியும்
இருந்து, தற்போது கும்பாபிஷேகத் திருப்பணி நடைபெற்று வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக