Thanjai

Thanjai

புதன், 23 மார்ச், 2011

உருளைக் கிழங்கு அல்வா

சுமங்கலி 1985 இதழில் வெளியானது




தேவையானவை:
உருளைக் கிழங்கு - ¼ கிலோ
சர்க்கரை - ¼ கிலோ
நெய் – 150 கிராம்
முந்திரிப் பருப்பு – 10
ஏலக்காய் - 5
பால் - ¼ கப்
கேசரி பவுடர் - 2 சிட்டிகை

செய்முறை:
உருளைக் கிழங்கை நன்கு அலம்பி, வேகவைத்து, தோலியை நீக்கி, மசிய அரைக்கவும். முந்திரியை பால் விட்டு அரைத்து உருளைக் கிழங்கு விழுதுடன் சேர்க்கவும்.

அடி கனமான பாத்திரத்தில் ½ கப் நீர் விட்டு, சர்க்கரையைப் போட்டு பாகு கம்பி பதம் வந்ததும், உருளைக் கிழங்கு விழுதைப் போட்டு அடி பிடிக்காமல் கிளறி நெய்யை ஊற்றி, கேசரி பவுடர் சேர்த்து கலந்து,  ஏலக்காயைப் பொடி செய்து போட்டு அல்வா பதத்திற்கு வந்ததும் நெய் தடவிய தட்டில் கொட்டி துண்டு போடவும்.
சுவையான உருளைக்கிழங்கு அல்வா தயார்!





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக