தினமலர் 10-06-2000 இதழில் வெளியானது
ரூ 500 சன்மானம் பெற்ற கட்டுரை
விட்டுக்
கொடுத்து...
எல்லா ஆண்களுக்கும் தான் ஆண்மகன்
என்ற ஈகோ இருக்கும். என் கணவரும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆனால், எப்படிப்பட்ட
கணவரையும் மனைவி தன் கைக்குள் வைத்துக் கொள்ள உதவுவதுதான் தலையணை மந்திரம். அதைச்
சரியாக நான் கையாள்வதால், அவர் என் கைக்குள் என்றும் அடக்கம்.
அவர் எடுக்கும் முடிவுகள், அது
பிள்ளைகளின் படிப்பாகட்டும், பைனான்ஸ் பிரச்சினையாகட்டும், எதுவாக இருந்தாலும்
எனக்குத் தவறாகத் தோன்றும்போது அவரை தாக்கிப் பேச மாட்டேன். அப்படி நேரடியா
மோதினால், அவருக்குக் கோபம் வந்து, வார்த்தை தடித்து சண்டையாகி விடக்கூடும்.
அப்பல்லாம் பிறகு உங்களை கவனிச்சுக்கிறேன்னு மனசில நினைச்சுப்பேன். இரவில்
படுக்கையில் இதமாக எடுத்துச் சொன்னால் அவரும் புரிஞ்சுப்பார். அதேபோல, நான் எந்தக்
காரியம் செய்தாலும் அவருடைய ஆலோசனையும், அனுமதியும் பெறுவதும் அங்கேதான். சின்னப்
புன்னகை, எளிமையான அலங்காரம், ஆதரவான பேச்சு, அன்பான உபசரிப்பு இவையே என்
ஆயுதங்கள். விட்டுக் கொடுத்து, விட்டுப் பிடித்து, அன்பால் கட்டிப் போடுவதுதான்
என் தந்திரம்.
இந்தத் தலையணை மந்திரத்தால் தான்
இருபத்தைந்து ஆண்டுகளாகியும் என் மண வாழ்க்கை இன்றும் இனிக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக