மங்கையர் மலர் டிசம்பர் 2002 இம்மாத இல்லத்தரசி போட்டியில்
மூன்றாம் பரிசு ரூ 200 பெற்ற சமையல் குறிப்பு
தேவையான பொருட்கள்:
மைதா - 1¼ கப்
உப்பு - தேவையான அளவு
கடலை மாவு - ¼ கப்
மிளகுப் பொடி - ¼ டீஸ்பூன்
சீரகப் பொடி - ½ டீஸ்பூன்
உருகிய நெய் – 4 டீஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
மைதாவை ஒரு துணியில் கட்டி,
இட்லித் தட்டில் வைத்து குக்கரில் வெயிட் போடாமல் 10 நிமிடங்கள் வைத்து, ஆறியதும்
உதிர்த்து, அத்துடன் உப்பு, நெய் சேர்த்து கெட்டியாகப் பிசையவும்.
கடலை மாவு, மிளகுப்பொடி,
சீரகப்பொடி, உப்பு, நெய் சேர்த்து கெட்டியாகப் பிசையவும். இரண்டையும் 15
நிமிடங்கள் ஊறியதும், மைதாக் கலவையை பெரிய உருண்டைகளாகவும், கடலை மாவுக் கலவையை
சிறு உருண்டைகளாகவும் உருட்டிப் போடவும்.
மைதா உருண்டையை பிளாஸ்டிக் கவரில்
எண்ணெய் தடவி, சிறிய தட்டையாகச் செய்து, அதனுள் கடலை மாவு உருண்டையை வைத்து, நன்கு
மூடி, மறுபடியும் உருட்டி, சிறிய தட்டைகளாகத் தட்டி, அதில் ஃபோர்க்கினால் சில
துளைகள் போட்டு, எண்ணெயில் பொன்னிறமாக வேகவிடவும்.
வித்தியாசமான சுவையுடன், இந்த ‘மொறு
மொறு தப்பட்’, டீ, காபியுடனும், தனியே சாப்பிடவும் ‘டேஸ்டி’யான நொறுக்ஸ்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக