சிறந்த கல்விமானாகவும், பண்டிதனாகவும் விளங்க
1. ப்ருஹ்ம ஸ்வரூப
பரமா ஜ்யோதிரூபா ஸநாதநீ |
ஸர்வ வித்யாதி
தேவீயா தஸ்யை வாண்யை நமோ நம: ||
(பொருள்: ப்ரம்ம ஸ்வரூபிணியாயும்,
ஒளி வடிவாயும், எப்பொழுதும் உள்ளவளான, எல்லா கல்விகளுக்கும் அதிபதியான வாணிக்கு
நமஸ்காரம்)
2. விஸர்க பிந்து
மாத்ராஸூ யத திஷ்டான மேவச |
தத்திஷ்டா த்ரியா
தேவீ தஸ்யை நித்யை நமோ நம: ||
(பொருள்: விஸர்க்கம், பிந்து, மாத்ரை
இவைகளில் எவள் வசிக்கிறாளோ அவைகளுக்கு எவள் அதிஷ்டான தேவதையோ, நீதி ரூபியான
அவளுக்கு நமஸ்காரம்)
3. வ்யாக்யா ஸ்வரூபா
ஸாதேவீ வ்யாக்யா திஷ்டாத்ரூபிணி |
யயாவிநா ப்ரஸங்க்யாவாந்
ஸஸ்க்யாம் கர்தும் நசக்யதே ||
(பொருள்: மூலக்ரந்தங்களின் விளக்க
ரூபியாயும் வியாக்யான அதிஷ்டான தேவதையாயும் எவளுடைய அருள் இல்லாவிட்டால்
பண்டிதர்கள் பயனற்றவராவார்களோ அந்த தேவிக்கு நமஸ்காரம்)
4. கால ஸங்க்யா
ஸ்வரூபாய தஸ்யை தேவ்யை நமோ நம: |
ப்ரம ஸித்தாந்த
ரூபாய தஸ்யை தேவ்யை நமோ நம: ||
(பொருள்: காலம், எண் இவற்றின்
ரூபியான உனக்கு நமஸ்காரம். ப்ரம்மம் ஒன்றை மற்றொன்றாக அறிவது, அதற்கு அதிபதியான
உனக்கு நமஸ்காரம்)
5. ஸம்ருதி ஸக்தி
ஞானசக்தி புத்திசக்தி ஸ்வரூபிணி |
ப்ரதிபா கல்பநாசக்தி:
யாச தஸ்யை நமோ நம: ||
(பொருள்: நினைக்கும் சக்தி, அறிவு
சக்தி, புத்தி சக்தி ரூபியாயும், மேதா விலாசம், கல்பனா சக்தி ரூபியாயுமுள்ளவளுக்கு
நமஸ்காரம்)
6. க்ருபாம் குரூ:
ஜகன்மாத: மாமேவம் ஹத தேஜஸம் |
ஞானம் தேஹி
ஸம்ருதீம் வித்யாம், சக்திம் சிஷ்ய ப்ரபோதினீம் ||
(பொருள்: ஏ லோக மாதாவே! இவ்விதம்
தேஜஸை இழந்த எனக்கு அருள்புரிய வேண்டும். அறிவைக் கொடு. ஞாபக சக்தி,
சீடர்களுக்குக் கற்பிக்கும் சக்தியைக் கொடு!)
7. யாக்ஞவல்க்
கியக்ருதம் வாணி ஸ்தோத்ரம் ஏதத்துய படேத் |
ஸகவீந்த்ரோ
மஹாவாக்மீ ப்ருஹஸ்பதி ஸமோ பவேத் |
ஸபண்டிதச்ச மேதாவீ
ஸூக்விந்த் ரோப வேத்ருவம் ||
(பொருள்: யாக்ஞவல்க்கியர் செய்த
இந்த சரஸ்வதி ஸ்தோத்ரத்தைப் படிப்பவன் சிறந்த கவியாயும், பேச்சுத் திறமை வாய்ந்தவனாயும்,
பிருஹஸ்பதிக்குச் சமமாயும், பண்டிதனாயும், மேதாவியுமாகிறன்.)
மேற்கண்ட சரஸ்வதி ஸ்தோத்திரத்தை
படிக்கும் குழந்தைகள் தினமும் சொன்னால் கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக