மங்கையர் மலர் மார்ச் 2000 இதழில் இம்மாத இல்லத்தரசி
தலைப்பின் கீழ் வெளியானது. என் குழந்தைக்குப் பிடித்தது என்ற போட்டியில் ஐந்தாம்
பரிசு பெற்ற சமையல் குறிப்பு
தேவையான பொருட்கள்
சிகப்பு வண்ணத்திற்கு:
உருளைக் கிழங்கு – 1 கிலோ
(வேகவிட்டு மசித்தது)
கடலை மாவு – 3 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை – 1
இஞ்சி
பச்சை மிளகாய் விழுது – 1 டேபிள்
ஸ்பூன்
ஆரஞ்சு கலர் – சில துளிகள்
உப்பு – தேவைக்கேற்ப
பச்சை வண்ணத்திற்கு:
பச்சை பட்டாணி (வேகவிட்டு மசித்தது)
- ½ கிலோ
இஞ்சி
பச்சை மிளகாய் விழுது – 2 தேக்கரண்டி
எலுமிச்சை – 1 மூடி
சர்க்கரை - ¼ தேக்கரண்டி
பச்சை கலர் – சில துளிகள்
உப்பு – தேவையான அளவு
வெள்ளை வண்ணத்திற்கு
பனீர் - ½ கிலோ
இஞ்சி
பச்சை மிளகாய் விழுது - ½
தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
மைதா – 2 தேக்கரண்டி
எண்ணெய் – வேகவிட தேவையான அளவு
செய்முறை
உருளைக் கிழங்கை வேகவிட்டு
கட்டிகளின்றி மசித்து அத்துடன், சிவப்பு வண்ணத்திற்குக் கூறப்பட்ட சாமான்களைச்
சேர்த்துப் பிசைந்து எலுமிச்சை சாறு, கலர் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து 15
உருண்டைகளாக உருட்டவும்.
பச்சைப் பட்டாணியை நீர் சேக்காமல்
ஆவியில் வேகவிட்டு மிக்ஸியில் நைஸாக அரைத்து மற்ற சாமான்களுடன் சேர்த்துப்
பிசைந்து 15 உருண்டைகளாக்கவும். இப்போது பச்சை வண்ண உருண்டை ரெடி.
பன்னீரை நன்கு உதிர்த்து மற்ற
சாமான்களை சேர்த்துப் பிசைந்து 15 உருண்டைகளாக்கவும்.
முதலில் பச்சை கலர் (பட்டாணி)
உருண்டையை சிறிய வட்டமாக்கி அதனுள் பனீர் உருண்டை வைத்து வட்டமாக உருட்டவும்.
கையில் எண்ணெய் தொட்டுக் கொண்டு
உருளைக் கிழங்கு (ஆரஞ்சு கலர்) உருண்டையை உள்ளங்கையில் வட்டமாகத் தட்டி அதனுள்
பனீர் உருண்டை உள்ளடக்கிய பட்டாணி உருண்டையை வைத்து எல்லா பக்கமும் இழுத்து மூடி
போண்டா போல் உருண்டையாக்கவும். கையில் எண்ணெய் தொட்டுக் கொண்டால்தான் ஒட்டாமல்
வரும். இது போல் எல்லாவற்றையும் செய்யவும்.
எண்ணெயை அடுப்பில் வைத்துக் காய்ந்ததும்
இந்த போண்டாக்களை பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
ஒவ்வொன்றையும் சரிபாதியாக வெட்டி
சட்னி அல்லது சாஸூடன் சூடாக பரிமாறவும். இதை பாதியாக வெட்டினால்தான் 3
வண்ணங்களுடன் ‘பட்டீஸ்’ கண்ணைக் கவர்வதோடு, ருசியும் ஸூப்பர்பாக இருக்கும்.
என் குழந்தைகள் மட்டுமல்ல, எந்தக்
குழந்தைக்கும் இந்த பட்டீஸ் பிடிக்குமென்பதில் சந்தேகமில்ல!
சத்தான ருசியான டிபன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக