Thanjai

Thanjai

திங்கள், 28 மார்ச், 2011

தோடுடைய செவியன்

ஞான பூமி ஆகஸ்டு 2003 இதழில் வெளியானது
(திருமுருக கிருபான்ந்த வாரியார் உரையிலிருந்து தொகுப்பு)



அசுவதரன், கம்பளதரன் என்ற இரு கந்தர்வர்கள். இவர்கள் மிகச்சிறந்த இசை வல்லுனர்கள். இவர்களின் நுணுக்கமான இசையைக் கேட்டு ரசிக்க வல்லார் இல்லை. இவர்கள் சிவபெருமானை வேண்டித் தவம் செய்தார்கள். சிவபெருமான் தோன்றி ‘என்ன வரம் வேண்டும்?’ என்று கேட்டார். ‘நாங்கள் பாடிக் கொண்டேயிருப்போம். நீங்கள் இடையறாது கேட்டுக் கொண்டேயிருக்க வேண்டும்’ என்றார்கள்.

ஐம்பெரும் தொழில்களைச் செய்கின்ற சிவபெருமான் இடையறாது அவர்கள் இசையைக் கேட்டுக் கொண்டிருக்க எப்படி இயலும்? அவர் தந்திரம் செய்தார். அந்த இரு கந்தர்வகளையும் தோடுகளாக மாற்றிச் செவிகளில் அணிந்து கொண்டார். காதில் அத்தோடுகள் பாடிக் கொண்டேயிருக்கும். சிவமூர்த்தி கேட்டுக் கொண்டேயிருப்பார்.

‘இறைவனே! முதிர்ந்த கந்தர்வர்களின் பாடல்களைக் கேட்கின்ற நீர் இளங்குழவியாகிய என் படலையும் கேட்டருளும்’ என்ற பொருளில்,
‘தோடுடைய செவியன்’
என்றார் திருஞானசம்பந்தர். இரு கந்தர்வர்கள் தோடாக இருந்து பாடுகின்றார்கள் என்ற கருத்துடைய பாடல் இது!
பாடுவார் பாடும் பரிசில் வரிசையெலாம்
ஆடுவாரின்றி அயலார் அறிவாரோ?
தோடுவார் காதேன்ற தோன்றாத் துணையயர்
பாடுவார் ஓரிருவருக்கு இட்ட படை வீடே!

(தொல்காப்பிய தேவர்)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக