கரடி எந்த நாட்டின்
தேசிய விலங்கு?
கோலா கரடி என்ற விலங்கினம்
ஆஸ்திரேலியாவில் மட்டும் உள்ளது. மிகச்சிறிய கண்களும், பழுப்பு நிற மென்மயிர்த்
தோலும், வயிற்றில் பையும், அமைதியான தோற்றமும் கொண்ட இவ்விலங்கு யூகலிப்டஸ் இலைகள்
மட்டுமே உண்ணும். ஒரு அதிசயமான விஷயம் இது
நீரே அருந்துவதில்லை. ஈரமான இலைகளைக் கூடத்தின்னாது. தப்பித் தவறி நீர் குடித்து
விட்டாலும் குடல்வால் வீணாகி இறந்து விடும்! உண்ணும் நேரம் தவிர மற்ற நேரங்களில்
உச்சாணி மரக்கிளையில் உடலைப் பந்துபோல் சுருட்டிக் கொண்டு உறங்குவதே இதன் வேலை.
ஒட்டகச் சிவிங்கி தலையைத்
திருப்பாமலே பின்னால் வருவதை அறியும்.
பாம்பு கண்ணைத் திறந்து கொண்டே
தூங்கும்.
நத்தைக்கு அதன் கொம்புகளில் உணர்வு
உறுப்பு உள்ளது.
வெட்டுக்கிளிக்கு காலில் காது
உள்ளது!
உலகில் மிகப் பெரிய நூல் நிலையம்
பாரிஸில் உள்ள ‘பிப்லியோ தெரு நேஷனல் லைப்ரரி!’
உலகின் மிகப் பெரிய பூங்கா
அமெரிக்காவிலுள்ள ‘எல்லோ ஸ்டோன் நேஷனல் பார்க்!’
மாஸ்கோவிலுள்ள சோவியத் அரண்மனையே (Palace of Soviet, Moscow) உலகின் உயரமான கட்டடமாகும்.
ரஷ்யாவின் மிருகச் சின்னம் கரடி.
மோட்டார் சைக்கிளைக் கண்டுபிடித்தவர்
ஜெர்மனியைச் சேர்ந்த டெய்ம்லர்.
ஸ்டெயின்லஸ் ஸ்டீல் உலோகத்தைக்
கண்டுபிடித்தவர் பிரியர்ட்லி என்ற இங்கிலாந்து நாட்டவர்.
உலகின் மிகப் பெரிய தீவு
கிரீன்லாந்து. இதன் பரப்பளவு 8, 27, 300 சதுர மைல்கள்.
கல்கண்டு 04.10.2004 பிட்ஸ் பகுதியில் வெளியான பொன்மொழி
எண்ணங்கள்-4
கல்கண்டு
4.10.2004 இதழில் பிட்ஸ் பகுதியில் வெளியானது
நிலவுக்குப்
போகலாமா?
நிலவுக்கும் பூமிக்கும் இடையிலுள்ள தூரம் 2,38,860 மைல்கள்.
குழந்தை தாயின் கருவில் உருவாகும்போது முதலில் தோன்றும்
உறுப்பு கண்கள்.
அக்பர் அரசு பதவியை ஏற்றபோது அவரது வயது பதின்மூன்று.
இந்தியாவில் மணி ஆர்டரில் பணம் அனுப்பும் முறை 1880-இல்
இருந்து ஆரம்பிதத்து.
நமது
தந்தை யார்?
அறிவைத் தந்தையாக வைத்துக் கொள்ளுங்கள். மன நிறைவைத் தாயாக
வைத்துக் கொள்ளுங்கள். உண்மையை உடன் பிறந்த சகோதரனாக வைத்துக் கொள்ளுங்கள். அறிவு,
மனதிருப்தி, நேர்மையான பாதையை மேற்கொண்டுள்ள நீங்கள் யாரைக் கண்டும் அஞ்சாமல்
வெற்றி பெறுவீர்கள்.
- சீக்கியப் பழமொழி
பிறரிடம் உள்ள குறைகளைச் சுட்டிக் காட்டுவது அவருக்கு நன்மை
செய்வதுதான். ஆனால் அதனினும் உயர்வானது அவரிடம் உள்ள நிறைகளைப் பாராட்டுவது.
- யெங்ஃபெல்லோ
கண்டிக்க அறியாதவன் கருணை காட்டவும் முடியாது.
- கார்லைல்
பெண்மணி ஏப்ரல் 2003 இதழில் வெளியான ஒரு எண்ணம்
தாயன்பை வெளியிட உலகில் உள்ள எந்த
மொழியிலும் போதிய வார்த்தைகள் இல்லை
என் எனர்ஜி ரகசியம்
அன்ற தலைப்பில் குமுதம் சிநேகிதி-ஜனவர் 1, 2006 இதழில் வெளியான ஒரு குறிப்பு
எழுத்தே என் எனர்ஜி
என்னுடைய எனர்ஜியின் ரகசியம்
இருப்பது என் எழுத்துகளில்தான்! இளம் வயதில் திருமணம், உடனே குழந்தைகள். இல்லற
வாழ்வில் அவ்வப்போது ஏற்பட்ட ஏமாற்றங்கள், ஏற்ற இறக்கங்கள் இவற்றுக்கு வடிகாலாக,
கிடைக்கும் நேரத்தில் என் எண்ணங்களை வெளிப்படுத்த நான் தேர்ந்தெடுத்தது எழுத்து!
மனம் சோர்வடையும்போது புத்தகம் படிப்பதும், ஏதாவது ஒரு ‘டாபி’க்கில் எழுதுவதும்
எனக்குப் புத்துணர்ச்சி தருபவை!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக