உடல் நலத்திற்கு பெரிதும்
உறுதுணையாக இருப்பவை பழங்கள். பழங்களை வெகு நாட்கள் வைத்து சாப்பிடுவது முடியாது.
ஆனால் பேரீச்சம் பழம் மட்டுமே இதற்கு விதி விலக்கு. இதனைப் பல நாட்கள்
வைத்திருந்து சாப்பிடலாம். உடல் வலிமைக்கு, தசை வளர்ச்சிக்கு, இரும்பு சத்துக்கு
மிகத் தேவையானது பேரீச்சை. உயர்தர பேரீச்சம் பழம் நம் நாட்டில் உற்பத்தியாவதில்லை.
எகிப்து, அரபு, ஆப்பிரிக்க நாடுகளில்தான் தரமான பேரீச்சம் பழங்கள் கிடைக்கின்றன.
அவை பக்குவப்படுத்தப்பட்டு நம் நாட்டுக்கு அனுப்பப்படுகின்றன. நம் நாட்டிலுள்ள
கருஞ்சிவப்பு நிற பேரீச்சம் பழங்களைவிட, நல்ல கருப்பு நிறத்தில் வெளி
நாட்டிலிருந்து வரும் பேரீச்சம் பழத்தில் 170 மில்லி கிராம் அளவு வைட்டமின் ‘ஏ’
சத்து அடங்கியுள்ளது. மற்றும் பி1 வைய்டமின், பி2 வைட்டமின்களும் உள்ளன. இரும்புச்
சத்து 30 மில்லி கிராமும், கால்சியம் 20 மில்லி கிராமும் உள்ளது.
பேரீச்சம்பழம் இரத்த விருத்திக்கு
மிகவும் நல்ல பழம். அனீமியா இருப்போருக்கும், ரத்தத்தில் ஹீமோகுளோபின்
குறைந்தோருக்கும் பேரீச்சம் பழம் மிக நல்லது. தினமும் இரவு பேரீச்சம் பழமும்,
பசும்பாலும் சாப்பிட்டால் இரத்தம் ஊறி உடல் நலம் கிடைக்கும்.
நீரிழிவு நோய் உள்ளவர்கள்கூட மற்ற
பழங்கள் போலன்றி பேரீச்சம் பழத்தை சாப்பிடலாம்.
காச நோயாளிகள் உடல் வலிமை பெற
தொடர்ந்து பேரீச்சம் பழங்களை சாப்பிடுவது நல்லது.
பேரீச்சம் பழங்களை கொட்டை நீக்கி,
நல்ல தேனில் ஊறவைத்து, தினமும் இரவில் இரண்டு பழங்கள் சாப்பிட்டால், ஆண்களுக்கு
தாது விருத்தி உண்டாகும். சத்துக் குறைவால் மெலிந்திருப்போரின் உடல் நிலை
சீரடைந்து, பலம் பெருகும்.
பேரீச்சம் பழத்தை கடைகளில் நல்ல
தரமாக, சுத்தமாக இருக்கிறதா எனப் பார்த்து வாங்குவது அவசியம். ஈக்களும்,
கொசுக்களும் மொய்த்துக் கொண்டு விற்பவற்றை வாங்கினால் நம் ஆரோக்கியம்தான் கெட்டுப்
போகும்.
தரமான பேரீச்சம்பழங்கள் போன்ற இனிமையான பகிர்வு ... சினேகிதிக்குப் பாராட்டுக்கள் + வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஇனிமையான உங்கள் வாழ்த்துக்கு நன்றி...
பதிலளிநீக்கு