Thanjai

Thanjai

திங்கள், 21 மார்ச், 2011

கோலம்! அழகுக் கோலம்!


மஞ்சுளா ரமேஷ்-சினேகிதி ஆகஸ்ட், 2006 இதழில் வெளியானது







1. வேதகாலத்தில் அங்குரார்ப்பணத்தின்போது முளைப் பாலிகை, பால், பால்குடம், விளக்கு இவற்றை வைக்க, தனித்தனி கட்டங்கள் வரைந்து அரிசி மாவு, மஞ்சள் பொடி நிரப்புவர். இதுவே காலப் போக்கில் கட்டக் கோலங்களாகி இருக்கலாம்.
2. அக்னி வளர்க்க ஒன்பது குழிகள் தோண்டிக் குண்டம் அமைப்பார்கள். அக்குழிகளை இணைக்கக் கோடு இட்டதே புள்ளிக் கோலம் ஒருவாகக் காரணம்.
3. தமிழ் மக்கள் பழங்காலத்தில் 'மணல் ஓவியம்' வரைந்ததாக பழைய நூல்கள் உரைக்கின்றன.
4. சில விசேஷமான கோலங்கள், விசேஷ பலன்களைத் தரும். நுனியில் சக்கரம் கொண்ட அறுமுக்கோண கோலத்தைப் போட்டால், துர் சக்திகள் வீட்டில் நுழையாது.
5. வெண்மையும், சிவப்பும் இணைந்த கோலம் சிவ - சக்தி ஐக்கியமாகக் குறிக்கப்படுகிறது.
6. சுவாமிக்கு முன்பாக கீழே கண்ட கோலங்கள் இட்டால் குபேர சம்பத்து, செல்வம் கிட்டும்.
            சங்கு - கூப்பிட்ட குரலுக்கு கைகொடுக்கும்.
            சக்கரம் - பகைமையை அழிக்கும்.
7. குழந்தை பிறந்தாலும், பெண்கள் பருவமடைந்தாலும் அதைத் தெரிவிக்கும் பொருட்டு, இரவானாலும் கோலமிடுவது வழக்கம்.
8. வடநாடுகளில் பெரும்பாலும் 'ரங்கோலி' என்ற வண்ணக் கோலங்களே போடப்படுகிறது. ஹோலி என்ற பெயருடைய முனிவரின் மனைவி தன் கணவர் இறந்ததும் அவரது உருவத்தைப் பல வண்ணப் பொடிகளால் வரைந்து, அதன் மீது 48 நாட்கள் படுத்து தன் உயிரை விடுகிறாள். ஹோலியின் நினைவாகப் பல வண்ணங்களில் போட்ட கோலம் ;ரங்கோலி' ஆயிற்று.
9. சூரியோதயத்திற்கு முன்னால் கோலமிடுவதால் செல்வம் பெருகும். இடப்புறமாக இழையை இழுக்கக் கூடாது. கோலத்தை நின்று கொண்டுதான் போட வேண்டும். கோலத்தை காலால் அழிக்கக் கூடாது.
10.          பொங்கலின் போது ரதம் போன்று கோலம் வரைந்து, நடுவில் சூரிய, சந்திரரை வரைந்து பூஜை செய்ய வேண்டும். கிழக்கு மேற்காக ரதம் வரைந்து, வடக்கு, தெற்கில் சூரிய சந்திரரை வரைய வேண்டும்.




1 கருத்து:

  1. ////கிழக்கு மேற்காக ரதம் வரைந்து, வடக்கு, தெற்கில் சூரிய சந்திரரை வரைய வேண்டும்.//// palanaal confusion ippothan bathil therinjuthu :) thx aunty..

    பதிலளிநீக்கு