நவராத்திரி பூஜை செய்வது மிகவும்
கடினம். மடி, ஆசாரம் ரொம்ப அதிகம். அதோடு நேரம் அதிகமாகும். முறைப்படி
செய்தால்தான் பலம் என்று பலர் எண்ணுகிறார்கள். அப்படியின்றி மிகவும் சுலபமாக,
குறைந்த நேரத்தில், கிடைத்த பூக்களைக் கொண்டு, எளிய நைவேத்யங்களுடன், மனம் ஒன்றிய
பக்தியோடு செய்யும் பூஜைக்கும் அம்மனின் அருள் கிடைப்பது நிச்சயம். அம்பாள் படத்தையாவது,
உருவத்தையாவது வைத்துக் கீழ்க்காணுமாறு பூஜை செய்யவும்.
1. காலையில் நீராடி, சுத்தமான உடைகளை
அணிந்து பூஜைக்கு வேண்டிய சாமான்களை எடுத்து வைத்துக் கொண்டு ஆசனத்தில் அமர்ந்து
ஆசமனம் செய்து கீழ்க்கண்டபடி சங்கல்பம் செய்யவும்.
2. மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா
ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் சுபே சோபனே முகூர்த்தே சுபதிதௌ துர்காலக்ஷ்மி
சரஸ்வதி பூஜாம் கரிஷ்யே !
3. பின்னர் புஷ்பம், அக்ஷதை எடுத்துக்
கொண்டு பின்வரும் த்யான சுலோகங்களைச் சொல்லி இடவும்.
துர்க்கை
வந்தே மாதரம் அம்பிகாம் பகவதீம்
வாணிரமா ஸேவிதாம் |
கல்யாணீம் கமனீய கல்பலதிகாம்
கைவல்ய நாதம் ப்ரியாம் ||
வேதாந்த ப்ரதிபாத்யமான விபவான்
மனோரஞ்சனீம் |
ஸ்ரீ சக்ராஞ்சித ரத்னபீட நிலையாம்
ஸ்ரீராஜ ராஜேஸ்வரீம் ||
லட்சுமீ
வந்தே பத்மகராம் ப்ரஸன்ன வதனாம்
ஸௌபாக்யதாம் பாக்யதாம் |
ஹஸ்தாப்யாம் அபயப்ரதாம் மணிகணைர்
நாநாவிதைர் பூஷிதாம் ||
பக்தாபீஷ்ட பலப்ரதாம்
ஹரிஹரப்ரம்மாதி பிஸ்ஸேவிதாம் |
பார்கவே பங்கஜ சங்கபத்ம
நிதிபிர்யுக்தாம் ஸதா சக்திபி: ||
சரசுவதி
சதுர்ப்புஜாம் சந்த்ரவர்ணாம் சதுரானன
வல்லபாம் |
பாரதீம் பாவயே தேவீம் பாஷாணாமதி
தேவதாம் ||
துர்க்கா லக்ஷ்மி ஸரஸ்வதிம்
த்யாயாமி |
புஷ்பம் அட்சதை கையில் எடுத்துக்
கொண்டு ‘ஆவாஹயாமி’ என்றூ சொல்லி படத்தின் கீழ் இடவும்.
‘ஆசனம் ஸமர்ப்பயாமி’ என்று சொல்லி
அட்சதை இடவும்.
‘பாதயோ: பாத்யம் ஸமர்ப்பயாமி’
என்றூ சொல்லி நீர் விடவும்.
‘அர்க்யம் ஸமர்ப்பயாமி’ என்று
சொல்லி நீர் விடவும்.
‘ஆசமனீயம் ஸமர்ப்பயாமி’ என்று
சொல்லி நீர் விடவும்.
‘ஸ்நானம் ஸமர்ப்பயாமி’ என்று
சொல்லி நீர் விடவும்.
(ஒரு சிறிய கிண்ணத்தை படத்தினருகில்
வைத்துக் கொண்டு நீர் விடவும்)
‘வஸ்த்ரம் ஸமர்ப்பயாமி’ – அட்சதை போடவும்.
‘ஆபரணம் ஸமர்ப்பயாமி’ – அட்சதை போடவும்.
‘கந்தாந்தாரயாமி’ – சந்தனம் இடவும்.
‘ஹரித்ரா குங்குமம் ஸமர்ப்பயாமி’ –
குங்குமம் இடவும்.
‘புஷ்பை பூஜயாமி’ – பூக்களை இடவும்.
கீழுள்ள நாமாக்களைச் சொல்லி பூவால்
அர்ச்சிக்கவும்:
பாவநாயை நம:
குணவத்யை நம:
உத்தமாயை நம:
நாநா வித்யாயை நம:
வாணியை நம:
கலாயை நம:
கருணாயை நம:
சண்டிகாயை நம:
இந்திராயை நம:
சுந்தர்யை நம:
பத்மஹஸ்தாயை நம:
அனகாயை நம:
துர்க்காயை நம:
கல்யாண்யை நம:
பலப்ரதாயை நம:
சிவாயை நம:
நாநாவித பரிமள புஷ்பாணி
ஸமர்ப்பயாமி |
‘தூபமாக்ராபயாமி’ என்று சொல்லி
தூபம் (சாம்பிராணி) காட்டவும்.
‘தீபம் தர்சயாமி’ என்று சொல்லி
தீபம் (நெய்த்திரி) காட்டவும்.
‘நைவேத்தியம் ஸமர்ப்பயாமி’ என்று
சொல்லி அன்னம், பாயசம், தேங்காய், வெற்றிலை, பாக்கு, பழம் இவற்றை நீர் தெளித்து
சுத்திகரிக்கவும்.
கையில் புஷ்பம், அக்ஷதை எடுத்துக்
கொண்டு,
‘துர்கா லக்ஷ்மி ஸரஸ்வதீப்யோ நம:
நாநாவித பலானி, நாளிகேர கண்டத்வயம் நிவேதயாமி’ என்று சொல்லி இடவும்.
‘தாம்பூலம் ஸமர்ப்பயாமி’ என்று
சொல்லி தாம்பூல நிவேதனம் செய்யவும்.
நைவேத்யங்களை அப்புறப்படுத்தவும்.
பிறகு கற்பூரம் ஏற்றிக் கொண்டு, ‘நீராஜனம்
க்ருஹாணேதம் நீரஜாஸன வல்லபே கற்பூராயம் கலாரூபே மஹிதம் ஹித தாயினி’ என்று சொல்லி
கற்பூரம் காட்டவும்.
புஷ்பம் போட்டு வணங்கவும்,
நமஸ்கரிக்கவும்.
‘பாஹிமாம் பாவநே தேவி ரக்ஷ ராக்ஷஸ
நாஸினி அவமாம்
அம்புஜாவாஸே த்ராஹிமாம் துஹினப்ரபே
|
தேஹிதேவி கலாதாக்ஷயம் வாணி
வாக்படுதமதி |
ஸரஸ்வதி ஸீதான் ரக்ஷஸதா
பாலயமேகுலம் ||
பின்பு அட்சதை, பூ கையிற் கொண்டு
நீர் விட்டு, ‘அநயா பூஜயா துர்க்கா லக்ஷ்மி ஸரஸ்வத்ய: ப்ரியந்தாம்’ என்று சொல்லி
கீழே விட்டு விடவும். ஆசமனம் செய்யவும்.
மேற்கண்ட பூஜையை ஒன்பது நாட்களும்
செய்யலாம். இரண்டு வயது முதல் பத்து வயதுக்குள் கன்னிகைக் குழந்தைகளுக்கு ஒன்பது
நாளும் மஞ்சள், குங்குமம், பூ, பழம், உடை வழங்கலாம்.
சுமங்கலிகளுக்குத் தினமும் மஞ்சள்,
குங்குமம், தாம்பூலம், சீப்பு, கண்ணாடி, சட்டைத்துணி வைத்துக் கொடுப்பது நல்ல
பலனைத் தரும். தேவி மஹாத்மியம், துர்கா ஸப்தசதி, மஹிஷாஸூர மர்த்தனி சுலோகம், தேவி
லலிதா ஸஹஸ்ர நாமம் இவற்றை ஒன்பது நாளும் பாராயணம் செய்வதால். ஒன்றுக்குப் பலவாக
பலன் கிடைப்பதாகக் கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக