சினேகிதி பிப்ரவரி, 2005 இதழில் வெளியானது
'ஒவ்வொரு வெற்றி பெற்ற
ஆணுக்குப் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள்' என்பது பழமொழி.
உங்கள் கணவரின் முன்னேற்றத்தில் உங்கள் பங்கு என்ன? தெரிந்து
கொள்ள விரும்புகிறீர்களா?
1)
உங்கள் கணவரின் முன்னேற்றத்திற்கென ஒரு திடீர் மாற்றம், முற்றிலும் சூழ்நிலை ஏற்படும்போது எப்படி எடுத்துக் கொள்வீர்கள்?
அ) விருப்பமில்லாமல்
ஆ) எதையும் ஒருமுறை முயன்று பார்க்கும் எண்ணத்துடன்.
இ) அவநம்பிக்கையுடன்.
2)
உங்கள் கணவர் செய்யும் வேலை பற்றி உங்களுக்குத் தெரிந்தது எவ்வளவு?
அ) உங்களால் புரிந்து கொள்ள முடிந்த அளவு.
ஆ) ஒன்றும் தெரியாது.
இ) ஓரளவு தெரியும்.
3)
கணவரின் வேலை விஷயத்தில் மனைவி எவ்வளவு தூரம் அக்கறை காட்டலாம்?
அ) செய்யமுடிந்த அளவு.
ஆ) அதிக அளவு அக்கறை அவசியமில்லை.
இ) கணவர் விரும்பும் அளவு.
4)
உங்கள் கணவரின் வேலை, அவரது பதவி பற்றி
தோழிகளிடம், உறவினர்களிடம் பேசுவதுண்டா?
அ) நிறைய
ஆ) பேசுவதே இல்லை
இ) எப்போதாவது
5)
உங்கள் கணவர் அலுவலக விஷயமாக ஒரு முக்கியமான முடிவு எடுக்க வேண்டிய
நிலையில் உங்கள் ஆலோசனையை நாடினால், என்ன செய்வீர்கள்?
அ) அவர் வேலையை அவரே முடிவெடுக்க விட்டு விடுவீர்கள்.
ஆ) அவர் பிரச்னைக்கு உங்களுக்குத் தெரிந்த தீர்வைச் சொல்லி உதவி செய்வீர்கள்.
இ) பிரச்னையை விரிவாக அலசி இறுதியில் அவரையே முடிவு எடுக்க விடுவீர்கள்.
6)
உங்கள் கணவர் திடீரென்று நாளை இதை விட நல்ல வேலை வெளிநாட்டில்
கிடைத்திருப்பதாகச் சொன்னால் உங்கள் உணர்வு எப்படி இருக்கும்?
அ) மகிழ்ச்சி.
ஆ) எதிர்காலம் பற்றி கவலை.
இ) குழப்பம்.
7)
மேற்கத்திய நாடுகளில் ஆண்கள் வேலைக்குச் சேரும் சமயம், அவர்களின் மனைவியரை இன்டர்வியூ செய்யும் வழக்கம் உள்ளது. அந்தச் சூழ்நிலை
உங்களுக்கு ஏற்பட்டால் நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா?
அ) இல்லை.
ஆ) ஆம்,
ஏற்றுக் கொள்வேன்.
இ) தெரியவில்லை.
8)
உங்களிடம் எந்த குணம் அதிகம் இருக்க வேண்டுமென உங்கள் கணவர்
விரும்புகிறார்?
அ) எந்த நிலைமைக்குத் தகுந்தவாறும் உங்களை ஈடுபாட்டுடன் மாற்றிக்
கொள்வது.
ஆ) தியாக உணர்வு.
இ) உயர்ந்த நோக்கமும், முன்னேறும் ஆசையும்.
9)
கணவரின் பதவி உயர்வு மற்றும் கெளரவத்திற்காக உயரதிகாரிகளுடனான
பார்ட்டிகளில் மனைவியரும் பங்கு கொள்வது அவசியமா?
அ) விருப்பமில்லை.
ஆ) பங்கு கொள்ளலாம்.
இ) பங்கு கொள்ள ம்யற்சி செய்யலாம்.
10)
உங்கள் கணவருடனான உறவில், நீங்கள் எப்படி
இருப்பது உங்களுக்குப் பொருத்தமானது என்று எண்ணுகிறீர்கள்?
அ) வீட்டில் கணவர் இருக்கும்போது அலுவலக் பிரச்னைகளில் மூழ்கவிடாமல் செய்வது.
ஆ) உற்சாகமும்,
ஊக்கமும் அளிப்பது.
இ) எவ்விதத்திலும் மகிழ்ச்சியுறச் செய்வது.
இனி இங்கு கொடுக்கப்பட்ட மதிப்பெண்களைக் கொண்டு உங்களுக்குக் கிடைத்த
மதிப்பெண்ணைக் கூட்டி, நீங்கள் எப்படிப்பட்ட மனைவி என்று கண்டுபிடித்துக்
கொள்ளுங்கள்!
அ
|
ஆ
|
இ
|
|
1
|
5
|
10
|
6
|
2
|
10
|
5
|
15
|
3
|
15
|
5
|
12
|
4
|
10
|
0
|
5
|
5
|
5
|
10
|
15
|
6
|
12
|
8
|
0
|
7
|
0
|
15
|
5
|
8
|
10
|
5
|
5
|
9
|
0
|
8
|
6
|
10
|
8
|
10
|
9
|
உங்கள் மதிப்பெண்:
120
= உங்கள் கணவர் ஏற்கெனவே சிகரத்தை நோக்கி சென்று கொண்டிருப்பார்.
அதற்கு தோள் கொடுக்கும் நல்ல, புரிந்து கொண்ட ம்னைவி
நீங்கள்! வாழ்த்துக்கள்.
100
- 119 = உங்கள் கணவரை உற்சாகப் படுத்துவதோடு அவர் மேலும் முன்னேற
ஏணியாக நீங்கள் இருப்பதால், விரைவில் உங்கள் கணவர் உயரத்திற்கு
செல்வார்.
75
- 99 = நீங்கள் சராசரி மனைவி. உசாகப்படுத்துவதுமில்லை, குறை சொல்வதுமில்லை. உங்கள் கணவரின் கோணத்திலிருந்து விஷயங்களைக் கவனித்து
அவருக்கு தகுந்த உதவி செய்தால், முன்னேற வாய்ப்புண்டு.
50
- 74 = உங்கள் கணவர் தன் முயசியால்தான் வெற்றி பெற வேண்டும்.
50க்குக் கீழ் = உங்கள் கணவருக்கு முன்னேறும் வாய்ப்பே இல்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக