Thanjai

Thanjai

திங்கள், 28 மார்ச், 2011

சுக்கு மல்லி காப்பி

தினமலர் – ஈரோடு – 07.06.1993 – செய்து பாருங்களேன் பகுதியில் வெளியானது



எல்லா வீடுகளிலும் தற்காலத்தில் சுக்கு மல்லி காபி குடிக்கும் பழக்கம் அதிகரித்துள்ளது. கடைகளில் அதிக விலை கொடுத்து சுக்கு மல்லி காபி பொடி வாங்குவதை விட நாமே தயாரித்தால் சிக்கனமாகவும், சுவையாகவும் இருக்கும்.

கொத்துமல்லி விதை 5 கப், மிளகு 5 கப், சீரகம் 3 கப், சுக்கு 4, 5 துண்டுகள் (பெரியதாக), ஏலக்காய் – 6, கிராம்பு – 6 இவற்றை எண்ணை விடாமல் சூடுவர வறுத்து, மிக்ஸியில் பொடி செய்து சலித்து வைத்துக் கொள்ளவும். ஒரு டம்ளர் காபிக்கு ஒரு ஸ்பூன் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி, அத்துடன் பால், சீனி சேர்த்து அருந்தவும். அஜீரணம், தலைவலி இவற்றிற்கு சுக்கு, மல்லி, டிகாஷனில், ஒரு ஸ்பூன் தேன் விட்டு, சிறிது எலுமிச்சை சாறு பிழிந்து அருந்தவும். ஜலதோஷம், இருமல் இவற்றிற்கு சுக்கு மல்லி பொடி போட்டு கொதிக்கும் போது சில துளசி, ஓமவல்லி இலைகளைப் போட்டு கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, பால், பனங்கல்கண்டு சேர்த்து அருந்தவும்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக