கிரேக்கர்களும், எகிப்தியர்களும்
ஆண்டு புதிதாகப் பிறப்பதை அறிவிக்கும் பொருட்டு, கைகுழந்தைகளை கூடையில் வைத்து
அணிவகுத்துச் செல்வர்.
பிரேசில் நாட்டில் டிசம்பர் 31-ம்
நாள் இரவு 12 மணி முதல் வெடிகளை வெடித்து புத்தாண்டை வரவேற்பர். அமைதி, தூய்மை,
அதிர்ஷ்டம் இவற்றை முன்னிட்டு வெண்ணிற ஆடைகளையே அணிவர். கடற்கரைக்குச் சென்று ஏழு
முறை அலகளில் குதித்து, பூக்களை கடலில் தூவியும், மணலில் மெழுகுவர்த்தியை ஏற்றி
வைத்தும் பிரார்த்தனை செய்வர். கடலன்னை மன விருப்பங்களை நிறைவேற்றி வைப்பதாக
அவர்கள் நம்புகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக