Thanjai

Thanjai

திங்கள், 28 மார்ச், 2011

தெரிந்து கொள்வோமா ?

மங்கையர் மலர் ஜூன் – 2001 இதழில் வெளியானது



www.tamilanjal.com என்ற இணைய தளத்திலிருந்து தமிழிலேயே ஈமெயில் அனுப்பும் வசதி உள்ளது. மற்ற இணைய தளங்களைப் போலின்றி தமிழில் எழுத வேண்டிய சொற்றொடர்களை அதே போன்று ஆங்கிலத்தில் டைப் செய்து மெயில் அனுப்ப முடியும். உதாரணமாக, ‘அன்புள்ள’ என்பதை ‘anbulla’ என்றும், ‘ஆசிகள் பல்’ என்பதை ‘AsikaL pala’ என்றூம் நாம் அடிக்கும் போது அவை தமிழில் அழகாக உருமாறி வருவதுடன் அனுப்புபவருக்கும் தமிழிலேயே போய்ச் சேரும். இதற்கென தனியாக ஃபாண்ட்(font) டௌன்லோட் செய்ய வேண்டிய அவசியமில்லை. கேபிடல் ‘L’ ற்கு ‘ள்’, சின்ன ‘l’ ற்கு ‘ல்’, கேபிடல் ‘T’ க்கு ‘ட்’, சின்ன ‘t’ க்கு த் என்பது போன்று மிகச் சுலபமான இந்த ‘Romanised Layout’ மூலம் இத்தளத்தின் வழியே, உறவினர்க்கும், நண்பர்க்கும் ஈமெயில் அனுப்பிப் பாருங்களேன்.


ஞான ஆலயம் நவம்பர் – 2001 இதழில் வெளியானது


18 வகை அபிஷேகங்களும் அதன் பயன்களும்:
1. தீர்த்தம் – மன சுத்தம்
2. எண்ணெய் – பக்தி
3. நெல்லிப் பொடி – நோய் நிவாரணம்
4. பால் – சாந்தம்
5. மஞ்சள் பொடி – மங்கலம்
6. தயிர் – உடல் நலம்
7. நெய் – நல்வாழ்வு
8. பன்னீர் – புகழ்
9. நாட்டு சர்க்கரை – சோதிடம்
10.          விபூதி – ஞானம்
11.          சந்தனம் – சொர்க்க லோகம்
12.          தேன் – குரல் வளமை
13.          பழச்சாறு – ஜனவசீகரம்
14.          பஞ்சாமிர்தம் – நீண்ட ஆயுள்
15.          பஞ்ச கவ்யம் – பாவம் நீங்கல்
16.          இளநீர் – புத்திரப்பேறு
17.          அன்னம் – அரசு உதவி
18.          மாப்பொடி – குபேர சம்பத்து

மாங்கல்ய மகிமை

பெண்கள் கழுத்தில் அணியும் மாங்கல்யம் 9 இழைகளை உடையது. ஒவ்வொன்றும் ஒரு குணத்தைக் குறிப்பன.
1. வாழ்க்கையைப் புரிந்து கொள்வது
2. மேன்மை
3. ஆற்றல்
4. தூய்மை
5. தெய்வீக எண்ணம்
6. நற்குணங்கள்
7. விவேகம்
8. தன்னடக்கம்
9. தொண்டு

காஞ்சியின் வேறு பெயர்கள்

1. பிரளய சிந்து
2. காமபீடம்
3. மும்மூர்த்தி
4. சிவபுரம்
5. விண்டுபுரம்
6. தபோமயம்
7. சகலசித்தி
8. கன்னிக் காப்பு
9. துண்டீரபுரம்
10.          சத்ய விரத க்ஷேத்திரம்
11.          பூலோக கயிலாயம்
12.          பிரமபுரம்

ஞான ஆலயம் ஏப்ரல் – 2002 இதழில் வெளியானது




சீர்காழி சடையப்பர்

திருஞானசம்பந்தர் அவதரித்து உமா தேவியின் ஞானப் பாலுண்டு அற்புதம் நிகழ்த்திய தலமான சீர்காழியின் வேறு பெயர்கள்:
1. பிரமபுரம்
2. வேணுபுரம்
3. புகலி
4. வெங்குரு
5. தோணிபுரம்
6. பூந்தராய்
7. சிரபுரம்
8. புறவம்
9. சண்பை
10.          ஸ்ரீகாளி
11.          கொச்சைவயம்
12.          கழுமலம்

இங்கு குடிகொண்டிருக்கும் இறைவனான சடையப்பர் சன்னிதிக்கு மரப்படிகளேறி தரிசிக்க வேண்டும். ஆண்கள் சட்டையைக் கழற்றி விட்டும், பெண்கள் தலையிலுள்ள பூவை எடுத்து வைத்துக் கொண்டு தரிசித்த பின்னும் அணிய வேண்டும்.

ஸ்ரீ தனலக்ஷ்மி தேவி யந்திரம்

மேற்கண்ட யந்திரம் சுவாமி முன்பு அரிசி மாவினால் போட்டு, கீழுள்ள மந்திரத்தைத் தினமும் 108 முறை ஜபித்தால் செல்வம் பெருகும். யந்திரத்தில் கட்டங்களில் பூ வைக்கவும்.
ஓம் ஸ்ரீம் க்லும் ஓம் தனம் தனம் தேஹிமாம்

பழனி தண்டாயுதபாணி


பழனி தண்டாயுதபாணி நவ பாசாணத்தால் ஆனது. நவ பாசாணங்க்கள் மருத்துவ குணம் கொண்டவை.
அவற்றின் பெயர்கள்:
1. லிங்க பாசாணம் (இருதய வலிமை)
2. குதிரைபல் பாசாணம் ( நரம்புத் தளர்ச்சி)
3. கார்முகில் பாசாணம் (சூடு தணிக்க)
4. ரச செந்தூரம் (தோல் வியாதிகளுக்கு)
5. வெள்ளை பாசாணம் (தாது குறைய நீக்கும்)
6. ரத்த பாசாணம் (கண் கோளாறு)
7. கம்பி நவாசரம் (உடலிலுள்ள துர் நீரை வெளியேற்ற)
8. கவுரி (பொதுவான மருத்துவ குணம்)
9. சீதை (அனைத்து பாசாணங்களையும் வேலை செய்ய வைக்கும் தன்மை)

திருநீலக்குடி நீலகண்டேசுவரர்

குடந்தை-காரைக்கால் சாலையில் அமைந்துள்ள திரு நீலக்குடியின் மூலவர் நீலகண்டேசுவரர் ஓர் அதிசய மூர்த்தி. இவருக்கு எத்தனை எண்ணெய் தேய்த்தாலும் வெளியே வழியாது. பாணத்திற்குள் உறிஞ்சப்படும். அம்பாளே இங்கு இறைவனுக்கு தைலாபிஷேகம் செய்வதாகக் கூறப்படுகிறது. இங்குள்ள பலா மரம் தெய்வீகமானது. பலாச்சுளைகளை இறைவனுக்கு நிவேதித்த பின்பே வெளியில் எடுத்துச் செல்ல வேண்டும். நிவேதிக்காமல் முழு பழத்தை வெளியில் எடுத்துச் சென்றால், அதில் பூச்சி உண்டாகி பழம் கெட்டுப் போவது இன்றும் கண்கூடாக நடக்கிறது. மரண பயம், எமபயம் பூச்சி உடையோர் இத்தலப் பெருமாளைத் தொழுது எருமை, எள், நீலப்பட்டுத் துணி தானம் செய்தால் பயம் நீங்கும்.

ராகு காலம் – எமகண்டம்

ராகு காலம், எம கண்டம் எந்த நேரம் என்பதை நினைவில் கொள்ள எளிய வழி:
ராகு காலம்

திருநாள் சந்தடியில் வெளியில் புறப்பட்டு விளையாடச் செல்வது நியாயமா?
இதில் திங்கள் 7½ - 9, சனி 9 - 10½ இவ்வாறு வார்த்தைகளின் முதல் எழுத்தை, கிழமையின் முதல் எழுத்தாகக் கொண்டு கணக்கிட வேண்டும்.

எமகண்டம்

விளையாட்டு புத்தியால் செய்வது திருந்தினாலும் நா(ஞா)ளடைவில் சரியாக வெளிப்பட்டு விடும். இதுவும் அதேபோன்று வியாழன் 6 -7½, புதன் - 7½ - 9 இது போன்று கணக்கிட வேண்டும்.

குங்குமம்


கட்டை விரலால் குங்குமம் அணிவது துணிவு தரும். ஆள்காட்டி விரலால் அணிந்தால் நிர்வாகத் திறமை மிகும். நடுவிரலால் இட்டுக் கொண்டால் ஆயுள் கூடும். மோதிர விரல் மாங்கல்யத்தையும், ஆரோக்கியத்தையும் தரும்.

சுமங்கலிப் பெண்களின் தலை வகிட்டின் நுனி சீமந்தம் எனப்படும். அது லட்சுமியின் இருப்பிடம். வீட்டுக்கு வரும் சுமங்கலிகளுக்குக் குங்குமம் அளிப்பவர், பெறுபவர் இருவருக்கும் மங்கலம் வரும்.

மஞ்சள் குங்குமம் அணிய மந்திரம்
லக்ஷ்மி வசீகரண சூர்ண ஸஹோ தராணி
த்வத் பாத பங்கஜ ரஜாம்ஸி சிவே ஜயந்தி
யானி ப்ரணம மிளிதானி ந்ருணாம் ல்லாடே
லும்பந்தி தாத்ரு லிஹிதானி துரக்ஷராணி

ஞான ஆலயம் ஏப்ரல்-2002 இதழிற்காக எழுதிய ஒரு செய்தி



மாயவரம்-குடந்தை சாலையில் அமைந்துள்ள திருவாவடுதுரை ஆதீனக் கோயிலில் நவக்கிரகம் கிடையாது.

போக சித்தரின் மாணவரான திருமாளிகைத் தேவர், நரசிங்கன் எனும் மன்னனின் படைகளை, கோயில் மதிலில் இருந்த நந்திகளை உயிர் பெற்று எழ செய்து விரட்டியமையால் இந்தக் கோயில் மதில்களில் நந்திகள் கிடையாது. மதில் சுவரில் நந்திகள் இல்லாத சிவாலயம் இதுவே.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக