மங்கையர்
மலர் டிசம்பர் 1998 மாத இதழில் சோயா பைட்டின் சமையல் போட்டியில் ஆறுதல் பரிசு
பெற்ற சமையல் குறிப்பு
தேவையானவை:
முளை கட்டி வறுத்து அரைத்த சோயா மாவு – 1 கப்
கொப்பரைத் தேங்காய் – 1 மூடி
சீனி – 1 கப்
கோவா – 5 டேபிள் ஸ்பூன்
ஏலப்பொடி – சிறிது
ரோஸ் எஸன்ஸ் - ¼ டீஸ்பூன்
கேசரி கலர் – சிட்டிகை
நெய் – 4 டீஸ்பூன்
மேல்
மாவிற்கு:
மைதா – 1 கப்
உப்பு – 1 சிட்டிகை
மஞ்சள் பொடி - ¼ டீஸ்பூன்
எண்ணெய் (வேகவிட)
செய்முறை:
சீனியை கம்பிப் பாகாக்கவும். அதில் சோயா மாவு, சீவிய
கொப்பரைத் துருவல் சேர்த்துக் கிளறி கெட்டியானதும் இறக்கி ஆற விடவும். கோவாவை
உதிரும் பதமாக வறுக்கவும். கிளறிய பூரணத்துடன், கோவா, ஏலப்பொடி, நெய், கலர் எஸன்ஸ்
சேர்த்துப் பிசைந்து சிறிய எலுமிச்சை அளவு உருண்டைகளாக்கவும்.
மைதாவுடன் உப்பு, ம.பொடி சேர்த்து தண்ணீரை விட்டு இளகிய
பதமாகக் கரைத்து, அதில் சோயா உருண்டைகளை நன்கு முக்கி, எண்ணெயில் பொறிக்கவும்.
மைதாவை கெட்டியாக பிசைந்து இதே பூரணத்தை வைத்துப்
போளியாகவும் தயாரிக்கலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக