Thanjai

Thanjai

திங்கள், 28 மார்ச், 2011

நம்ப முடியவில்லை

சினேகிதி மார்ச் 2003 இதழில் வெளியானது

உலகில் நம்மால் நம்ப முடியாத பல விஷயங்கள் உள்ளன அவற்றுள் சில:
பக்கிங்காம் அரண்மனை 600 அறைகளைக் கொண்டது.

ஒவ்வொரு ஆண்டும் ஸ்வீடனில் 100 பேர் படுக்கும் வசதி கொண்ட பனிக்கட்டியாலான இக்ளூ (Igloo) ஹோட்டல் உருவாக்கப்படுகிறது. ஐயோ! ஐஸில் படுக்கையா? நினைத்தாலே உடல் சில்லிடுகிறதே!

உலகிலேயே வியாபார நிமித்தம் காரணமான ஃபேக்ஸ்களை(Fax) அதிகம் உபயோகப்படுத்தும் நாடு ஹாங்காங். ஏப்ரல் 2000ஆம் ஆண்டில் இங்கிருந்த ஃபேக்ஸ் (Fax)  லைன்களின் எண்ணிக்கை 392,00,00,000 !

செக்கஸ்லோவியாவில் ஒரு சர்ச்சில் உள்ள தொங்கும் விளக்கு முழுவதும் மனித எலும்புகளால் உருவாக்கப்பட்டது!

உலகிலேயே அகலமான தெரு பிரேசில் நாட்டில் உள்ள மானுமெண்டல் ஆக்சிஸ் (Monumental Axis). இங்கு 160 கார்கள் ஒன்றன் பக்கத்தில் வரிசையாகச் செல்ல முடியும். நினைத்துப் பார்த்தால் இந்தக் கற்பனையே தலை சுற்றுகிறதல்லவா?

அமெரிக்காவிலுள்ள ஃப்ராங்க் ஃபோர்ட் அவென்யூ பிரிட்ஜ் (Frankford Avenue Bridge) 1697ல் கட்டப்பட்ட்து. ஃபிலடெல்பியாவில் உள்ள இந்தப் பாலம் இன்றுவரை உபயோகத்திலுள்ள பழமையான பாலங்களுள் ஒன்றாகும்.

பெண்மணி ஏப்ரல் 2003 இதழில் வெளியானது

தாயன்பை வெளியிட உலகில் எந்த மொழியிலும் போதிய வார்த்தைகள் இல்லை.

திருக்கழுகுன்ற மலை, வேதத்தின் அம்சம் என்பதால் ‘வேதகிரி’ என்றழைக்கப்படுகிறது. இங்குள்ள சங்கு தீர்த்தத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை சங்கு பிறக்கிறது. மார்க்கண்டேயர் இங்கு இறைவனை வழிபட பாத்திரமின்றி தவித்தபோது, இறைவன் சங்கு உற்பத்தி செய்து தந்ததாக சொல்லப்படுகிறது. அது முதல் 12 ஆண்டுக்கு ஒரு முறை இவ்வாறு சங்கு உற்பத்தியாகிறதாம்.
பிரசுரிக்கப்படாத செய்தி
திருக்கழுக்குன்றம் குளத்தில் உருவாக்கும் புனித சங்கு :
மார்க்கண்டேயர் அனைத்து சிவ தலங்களையும் வழிபட்டு விட்டு திருக்கழுகுன்றம் திரிபுரசுந்தரி சமேத வேதகிரீஸ்வரர் திருக்கோவிலுக்கு வருகை தந்தார். அங்கு அவர் பூஜை செய்யும்போது தீர்த்தம் எடுப்பதற்கான பாத்திரம் இல்லை. அவர் பூஜைக்குரிய தீர்த்தப் பாத்திரம் வேண்டி சிவனை நினைத்தார்.
அப்போது சங்கு தீர்த்தக்குளத்தில் ஒரு அற்புதமான சங்கு கரை ஒதுங்கியது. அச்சங்கை சிவபெருமானே பூஜைக்கு கொடுத்து அருள் புரிந்ததாக தல வரலாறு கூறுகிறது. இதனையடுத்து 12 ஆண்டுக்கு ஒருமுறை சங்கு தீர்த்தக் குளத்தில் சங்கு உருவாகிறது. இதனை புனித சங்காக பூஜையில் வைத்து பூஜித்து வருகிறார்கள்.

ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் கடைசி சோமவாரத்தில் வேதகிரீஸ்வரருக்கு 1008 சங்காபிஷேகம் நடைபெறும்போது சங்குதீர்த்தக்குளத்தில் உருவாகும் புனித சங்கு பூஜையில் முதன்மை பெறும். இந்த குளத்தில் குளித்தால் தோல் நோய் தீரும் என்பது நம்பிக்கை. இதனால் இந்தியா முழுவதும் இருந்து ஆன்மீக சுற்றுலா வருபவர்கள் இந்த குளத்தில் நீராடி செல்கின்றனர்.

1939-ல் இருந்து இதுவரை 6 சங்குகள் பிறந்துள்ளன. அவை பத்திரமாக பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த 1999-ம் ஆண்டு ஆடி பூரம் தினத்தில் சங்கு தீர்த்தக்குளத்தில் புனித சங்கு உருவானது. இதனையடுத்து 12 ஆண்டுக்குப் பிறகு கடந்த 2011-ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தியான வியாழக்கிழமை சங்கு தீர்த்தக்குளத்தில் புனித சங்கு கரைஒதுங்கியது. இது 7-வது புனித சங்காகும். அடுத்த புனித சங்கு 2023-ம் ஆண்டு பிறக்கும்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக