என்
விமரிசனங்கள்
மங்களம் தரும் வீரபத்திரர் பற்றிய கட்டுரையும்,
பூஜை முறைகளும் அவரிடம் பயம் நீக்கி,
பக்தியை ஏற்படுத்தியது.
ஞான ஆலயம் அக்டோபர் 2005 இதழில் வாசகர் பதில்கள் பகுதியான ஒரு செய்தி
பி.ராஜேஸ்வரி மதுரை வீரன் கோயில் பற்றிக் கேட்டிருந்தார்.
அப்படி ஒரு கோயில் தஞ்சை ஜில்லா, பாபநாசம் தாலுக்காவில்,
வடகுரங்காடுதுறை என்ற ஊரில் இருக்கிறது. இது,
என் தாய்வழிப் பாட்டனாரின் குலதெய்வம்.வாய்க்காலில்
(சிறிய வாய்க்கால்தான்) இறங்கி மறுகரை ஏறி, சிறிது தூரம் கரையோடு நடந்து சென்றால்
காட்டுக்குள் மதுரை வீரன் கோயில் கொண்டிருக்கிறார்.திருவையாற்றிலிருந்து 7
கி.மீ. கிழக்கு,
கும்பகோணத்திலிருந்து 15
கி.மீ. திலைவில் உள்ளது. யாரைக் கேட்டாலும்
சொல்வார்கள்.இவ்வளவு தூரம் வருபவர்கள், ஆடுதுறையில் 'வாலி' பூஜித்த தயாநிதீஸ்வரரையும்,
அருகிலேயே 108
வைணவத் தலங்களில் ஒன்றான ஜகத்ரட்சகப்
பெருமாளையும் தரிசிக்கலாம்.
எழுதியவர் - ஜெ. ஜெயலக்ஷ்மி.
(இச்செய்தியை திருமதி இந்துமதி (சென்னை-24),
ராதா பாலு(மும்பை) ஆகிய வாசகர்களும் தெரிவித்து
உள்ளனர். அனைவருக்கும் நன்றி)
பாராட்டுக்கள் + வாழ்த்துகள்.
பதிலளிநீக்குமிக்க நன்றி...
பதிலளிநீக்கு