Thanjai

Thanjai

புதன், 23 மார்ச், 2011

ஸ்லிம் ஆகணுமா?

கிருஹ ஷோபா ஜனவரி 2003 இதழில் வெளியானது



“ஹாய் மாலா! என்ன அடையாளமே தெரியாம பெருத்துட்டியே, ஸ்லிம் அண்ட் டிரிம்மா காலேஜ் நாளில் இருந்த மாலாவா நீ?”

“ஜானு! நீ பின் சீட்டில் உட்கார்ந்ததும் ஸ்கூட்டரே அமுங்கி விட்டது பார்!”


அம்மா! உன்னைப் பார்க்க எதிர்த்த வீட்டு குண்டு ஆண்ட்டி வந்திருக்காங்க!”

இது போன்ற பேச்சுக்களை அவ்வப்போது கேட்க நேரும் 35 முதல் 40 வயதிருக்கும் பெண்மணியா நீங்கள்? நிதானமாகக் கண்ணாடியில் பார்த்தபோது, இத்தனை நாள் தெரியாத பருமன் இப்பொழுது விசுவரூபமெடுத்து தெரிகிறதா? உங்களுக்கு மட்டுமல்ல, பல பெண்களின் பெரிய பிரச்சினை இது.

அக்காலப் பெண்மணிகள் குனிந்து பெருக்கி, துடைத்து, அம்மி, கல்லுரலில் அரைத்து, துணி துவைத்து, வாசல், முற்றம், கொல்லை என்று நிறைய நடந்து... அடேயப்பா! எத்தனை உடற்பயிற்சிகள்? அதனால்தான் அன்று பெரும்பாலான பெண்மணிகள் அளவான, அழகான, ஆரோக்கியமான உடற்கட்டுடன் இருந்தார்கள். இன்றோ எல்லாவற்றிற்கும் மிஷின். கொரிக்க, குடிக்க ‘ரெடிமேட்’ ஸ்நாக்ஸ், பானங்கள்! சதா நேரமும் டி.வி.யின் ‘மெகா சீரியல்’கள் முன் ஆசனம்! இன்றைய முக்கால்வாசிப் பெண்களின் ‘ஓவர் வெயிட்’டுக்கு இவையே முக்கியக் காரணங்கள்.

திருமணமாகி குழந்தை பிறந்ததுமே பெண்களுக்கு தங்கள் அழகு பற்றிய உணர்வு குறைந்து விடுகிறது. குழந்தை வளர்ப்பு, அவர்கள் படிப்பு, சாப்பாடு, டிபன், வேலை என்று குடும்பத்திலேயே உழன்று தன்னை மறந்துவிடும் குடும்பத் தலைவிக்கு அழகு பற்றிய ஆர்வம் 35 வயதுக்கு மேல் ஏற்படும்போது, தன் பருமனைக் குறைக்க எது செய்யவும் தயாராகிறாள்.

என் தோழி ஒருத்தி பருமனைக் குறைக்க ஒரு நாளைக்கு நான்கு முறை ‘வாக்கிங்’ செல்வாள்! ஒரு வேளை மிகச் சிறிதளவு சாப்பிடுவாள்! பலன்? உடம்பு குறையவில்லை! அனீமியா வந்து ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆனதுதான் மிச்சம்! உடல் எடை படிப்படியாகக் குறைய வேண்டும். கடுமையான உடற் பயிற்சிகள் உடலை எளிதில் சோர்வடையச் செய்யும்.
v நொறுக்குத் தீனிகளை அடிக்கடி சாப்பிடக் கூடாது.

v இனிப்பு உடல் எடையை அதிகரிக்கும் என்பதால், இனிப்பு சாப்பிட ஆசை ஏற்படும்போது. சிறிது பற்பசையால் பற்களைத் தேய்த்தால், பற்பசையின் இனிப்பு, அந்த ஆசையை நீக்கி விடும்.


v வாரம் ஒரு முறை எடையைப் பார்க்கவும்.

v எளிய உடற்பயிற்சிகள், தினமும் அரை மணி நேரம் வேக நடை, எடை குறைப்புக்கு எளிய வழி.


v சமைத்த உணவை விட பச்சைக் காய்கறிகள், பழங்கள், முளை வந்த தானியங்களை அதிகம் சாப்பிடவும்.

v முட்டைக்கோஸ், தக்காளி இவற்றிற்கு எடை குறைக்கும் சக்தி அதிகம். தினமும் காலை ‘கோஸ் சாலட்’ செய்து சாப்பிடவும். காலை உணவுக்கு பதில் 2 பழுத்த தக்காளிகளை சாப்பிடவும்.


v கேழ்வரகை கஞ்சி, தோசை செய்து சாப்பிட்டால் எடையும் குறையும்; உடலுக்கு சத்தும் கிடைக்கும்.

v டென்ஷன், கவலை இவையும் ஆரோக்கியத்தின் எதிரிகள்.


v பசியைக் கட்டுப்படுத்தும் ‘ஆம்பெடமைன்ஸ்’ என்ற மருந்து சாப்பிடுவதால் இதயம், நரம்பு சம்பந்தமான நோய்கள் வருவதாக ‘ஃபெடரல் ட்ரேட் கமிஷன்’ (அமெரிக்கா) இவற்றைத் தடை செய்துள்ளது.

v எபிட்ரின் கலந்த மருந்துகள் ஹார்ட் அட்டாக், பக்கவாதம் இவற்றை ஏற்படுத்தும்.


v ‘ஒரே வாரத்தில் 5 கிலோ குறையலாம், 10 கிலோ குறையலாம்’ என வரும் அறிவிப்புகள் முற்றிலும் பொய்யானவை.

v கொழுப்பைக் கரைத்து எடையைக் குறைக்கும் எந்த மருந்தும், மற்ற வைட்டமின் சத்துப் பொருள்களையும் கரைத்து விடுமென்பதை நாம் உணரவேண்டும்.


v ‘டயட்’ மாத்திரைகளிலுள்ள ‘ஃபினைல் ப்ரோபானோலமைன்’ என்ற பொருள் பெண்களுக்கு மூளையில் ரத்தக் கசிவை ஏற்படுத்துமென அமெரிக்காவின் எப்.டி.ஏ. நிறுவனம் எச்சரித்துள்ளது.

v சில மின் உடற்பயிற்சி சாதனங்களை சரியாக உபயோகப் படுத்தாவிடில் அவையும் ஆபத்தானவையே.



v இயற்கையான எளிய உடற் பயிற்சிகள், உணவு முறையைக் கையாள்வதே உடல் எடை குறைப்பிற்கு உகந்த வழியாகும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக