ஆணுக்கும் பெண்ணுக்கும் மனதளவிலும்,
உடலளவிலும், செய்கைகளிலும், உணர்ச்சிகளிலும் நிறைய வேற்றுமை உண்டு என்கிறார்கள்
ஆராய்ச்சியாளர்கள்.
பெண்ணின் மூளையின் சராசரி அளவு 1.2
கிலோ கிராம், ஆண்களின் மூளையின் எடை 1.6 கிலோ கிராம் (ஓகோ – ஆண்களுக்குத் தலைக்
கனம் கொஞ்சம் அதிகம்தான்)
ஆண்களுக்கு மிகச் சிறிய
எழுத்துக்களைக் கூடப் படிக்கும் கூரிய பார்வைத் திறன் உண்டு. ஆனால் இருட்டான
இட்த்தில் இருக்கும் பொருட்களைக் கூட ‘டக்’கென்று எடுக்கக் கூடிய பெருமை
பெண்களுக்கே!
(திடீரென்று விளக்கு ஆனையும்போது, ‘ஏய்!
சீக்கிரம் மெழுகுவர்த்தி ஏற்று’ என்று இருந்த இடத்திலிருந்தே ஏன் ஆண்கள் சத்தம்
போடுகிறார்கள் என்று இப்போது புரிகிறதா?)
வாழ்க்கைத் துணையைத்
தேர்ந்தெடுக்கும் போது அழகை மட்டுமே பார்ப்பவர்கள் ஆண்கள். பெண்களோ, ஆணின்
திறமையையும், புத்திசாலித்தனத்தையுமே பெரிதாகப் பார்க்கிறார்கள்.
பெண்கள் தங்களது கணவன்,
குழந்தைகள், சுற்றம் என்ற பிணைப்புகளிலேயே சுற்றிச் சுழல்பவர்கள். அவர்களின்
பாராட்டிலேயே மனம் மகிழ்பவர்கள். ஆனால் ஆண்களோ தங்கள் திறமை வெளி மனிதர்களாலும்
புகழப்பட வேண்டும் என்று எதிர்பார்த்து உழைப்பவர்கள். (சமயத்தில் மனைவி,
குழந்தைகளைக் கூட மறந்து விடுவார்கள்.)
பெண்கள் எத்தனை பெரிய நோய்
வந்தாலும் அதைத் தாங்கிக் கொள்வதோடு அதைப் பெரிதுபடுத்த மாட்டார்கள். ஆனால் ஆண்களோ
சின்ன தலைவலி என்றால் கூட தனக்கு ஏதோ பெரிதாக வந்து விட்டதாகவும், தன்னையே
எல்லோரும் கவனிக்க வேண்டும் என்றும் நினைக்கும் மனப்பான்மை உடையவர்கள். சாதாரண
காய்ச்சலுக்குக் கூட வீடு இரண்டு பட்டுவிடும். (அதனால்தான் குழந்தைப் பேற்றை
கடவுள் பெண்களுக்கு வைத்து விட்டார் போலும்!)
பெண்களுக்குக் காது கேட்கும் திறன்
மிக அதிகம். ஆனால் ஆண்களுக்குக் குறவு. அதே திறமை வயதான பின் சீக்கிரம் குறைந்து
விடுவது பெண்களுக்கே. ஆண்களுக்கு வயதானாலும் காது கூர்மை சீக்கிரம்
குறைவதில்லையாம்!
வெளியிடங்களிலோ, கடைகளிலோ ஒரு
பெண்ணின் கண்களில் கண்ணாடி பட்டுவிட்டால் வெகு இயல்பாக ஒரு சில நிமிடங்கள் தன்னை
சரி செய்து கொண்டபின் நகர்ந்து விடுவாள். ஆனால் ஒரு ஆணோ, சுற்றிலும் தன்னை யாரும்
பார்க்கவில்லை என்று உறுதி செய்து கொண்ட பிறகே நின்று நிதானமாக தன் அழகை ரசித்துக்
கொள்வான்! (அடுத்த முறை துணிக்கடை, நகைக் கடை போகும் போது கவனித்துப் பாருங்கள்!)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக