Thanjai

Thanjai

புதன், 23 மார்ச், 2011

நீங்க எப்படி?

அவள் விகடன் டிசம்பர் 5, 2003 இதழில் வெளியானது




இனிய தாம்பத்தியத்துக்கு ரொமான்ஸ் மிக அவசியம். ரொமான்ஸ் இல்லாத வாழ்க்கை இனிப்பில்லாத ரசகுல்லா போன்றது! உங்கள் வாழ்வில் ரொமான்ஸ் எப்படி உள்ளது என்பதை அறிய, கீழுள்ள கேள்விகளுக்குப் பதிலளித்துத் தெரிந்து கொள்ளுங்கள்!

1. உங்கள் திருமண நாளுக்கு இன்னும் ஒரு வாரம் உள்ளது. உங்கள் துணைக்கு என்ன பரிசு கொடுப்பீர்கள்?
a. எதுவுமில்ல. பரிசு கொடுப்பதில் ஆர்வமில்லை.
b. கடைசி நேரத்தில் ஒரு கார்டு வாங்கிக் கொடுப்பேன்.
c.  என் பார்ட்னருக்கு மிகவும் விருப்பமான ஒரு பொருளை பரிசாக வாங்கிக் கொடுப்பேன்.
d. ஏற்கனவே பரிசு வாங்கி, ஒரு தனிப்பட்ட கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்துவிட்டேன்.
2. உங்கள் துணைக்கு நீங்கள் வைத்துள்ள செல்லப் பெயர்
a. வித்தியாசமான பெயர்.
b. ஹனி.
c.  அவர்(ள்) சொந்தப் பெயரே (சுருக்கமாக)
d. பேபி, டார்லிங்
3. ஒருவருக்கொருவர் மஸாஜ் செய்து கொள்வதுண்டா?
a. தினசரி வேலைக்குப் பின் என் துணைவர்(வி) செய்வார்.
b. சோர்வுற்ற நேரங்களில் இருவரும் ஒருவொருக்கொருவர் செய்து கொள்வோம்.
c.  காதல், மென்மை இவற்றுடன் மஸாஜ் எண்ணெய் சேர்த்து செய்வோம்.
d. மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் மெல்லிய இசையுடன் மஸாஜ் எண்ணெய் கொண்டு செய்வோம்.
4. உங்கள் துணை உங்களை அணைத்துக் கொள்ள விரும்பும்போது...
a. விருப்பத்துடன் நீங்களும் அணைத்துக் கொள்வீர்கள்.
b. அணைப்பதில் விருப்பமின்றி தவிர்த்து விடுவீர்கள்.
c.  எப்போதும் சுகமான அணைப்பில் இருக்க விரும்புவீர்கள்.
d. உங்களுக்கு பிடிக்காவிட்டாலும் தடுக்கமாட்டீர்கள்.
5. உங்கள் இருவருக்குள்ளும் பெரிய சண்டை. தவறு உங்கள் பக்கம் என்றுணர்ந்து ஒப்புக் கொண்ட பின்பும் உங்கள் துணை கோபத்துடன் இருக்கிறார். அவர் கோபத்தை எப்படி மாற்றுவீர்கள்?
a. ‘நான் தவறு செய்ததை மன்னித்து விடுங்கள். இனி இது பற்றி பேச வேண்டாம்’ என்று முற்றுப்புள்ளி வைத்து சகஜமாகிவிடுவீர்கள்.
b. ‘என்னை மன்னித்துவிடு’ என்று ½ மணிக்கொரு முறை போன் செய்வீர்கள்!
c.  சில பூங்கொத்துகளுடன் ‘ஸாரி’ சொல்லிவிட்டு, ‘இனி எப்போதும் இப்படி சண்டை போட மாட்டேன்’ என்பீர்கள்.
d. நீங்கள் தவறு செய்ததன் காரணத்தை விளக்கி, மன்னிப்பு கேட்டு, அதன்பின் அன்பு மழையால் குளிப்பாட்டுவீர்கள்!
6. உங்கள் துணையின் பிறந்த நாளுக்கு எப்படிப்பட்ட பரிசைத் தேர்ந்தெடுத்து வாங்குவீர்கள்?
a. அடிக்கடி உப்யோகிக்கக்கூடிய ஒரு பொருள்.
b. உங்கள் துணைக்கு மிகவும் பிடித்த, உங்களை எப்போதும் அவருக்கு நினைவுபடுத்தும் பொருள்.
c.  ஒரு கைக்கடிகாரம், மிகப் பெரிய ரெஸ்டாரெண்டில் டின்னர், எல்லாவற்றுக்கும் மேலாக உங்கள் துணை விரும்பிய பொருள்.
d. இருவரையும் உணர்ச்சி பூர்வமாக இணைக்கும் ஒரு பொருளுடன், நெஞ்சைத் தொடும் வாசகங்களுடன் ஒரு வாழ்த்து அட்டை.
7. உங்கள் துணையுடன் கவலைகளை மறந்து ஜாலியாக ஒரு டிரிப்...
a. திருமணமான புதிதில் அடிக்கடி, பின்பு வருடம் ஒரு முறை.
b. விடுமுறையும், நேரமும் கிடைக்கும்போது எல்லாம்.
c.  தினசரி வாழ்க்கையில் சலிப்படந்த துணை பலமுறை கேட்டபிறகு வேண்டா வெறுப்பாக.
d. திருமண நாளின் சமயம் கண்டிப்பாக ஒரு வாரம் லீவுதான்... ஹனிமூனைப் புதுப்பிக்க!
8. வாலண்டைன் டே பற்றி உங்கள் கருத்து.
a. தேவையில்லாதது.
b. காதலைத் தெரிவிக்க ஒரு நாள்.
c.  துணைக்காக ஒரு நாளை செலவிடும் உற்சாகம்.
d. காதலும், ரொமான்ஸூம் இணைந்த உற்சாகமான தினம்.
9. ‘ஐ ல்வ் யூ’ – இந்த வார்த்தைகளை உங்கள் துணையிடம் சொல்வதுண்டா?
a. தினமும்.
b. எத்தனை முடியுமோ அவ்வளவு.
c.  துணையுடன் மனம் ஒன்றிய  நேரங்களில் மட்டும்.
d. சொன்னதே இல்லை.
10. ‘ஐ லவ் யூ’ – என்ற வார்த்தைகளை எப்படிச் சொல்வீர்கள்?
a. அன்பும், காதலும் நிறைந்த உணர்வோடு.
b. கவிதை வாக்கியங்களுடன் இணைந்து.
c.  உங்கள் துணை சொன்னபிறகு, நீங்களும் சொல்வீர்கள்.
d. படுக்கையறையில் மட்டும்.
கேள்வி
1
2
3
4
5
6
7
8
9
10
பதில்
a
1
3
1
2
1
1
2
1
2
3
b
1
2
2
1
3
2
3
2
3
3
c
2
1
2
3
2
3
1
1
2
1
d
3
2
3
1
2
2
2
3
1
1

10 முதல் 16 மதிப்பெண்கள்:
ரொமான்ஸை நீங்கள் நெருங்கவே இல்லை. உங்கள் துணைக்கு இந்த ரொமான்ஸ் விஷயங்களில் விருப்பமும் ஈடுபாடும் இல்லை என்றாலும் உங்கள் மென்மையான காதல் உணர்வுகளை அவ்வப்போது அணைத்து, முத்தமிட்டு, ஐ லவ் யூ சொல்லி வெளிப்படுத்துங்கள். அதனால் மகிழ்ந்த துணை உங்களை சந்தோஷப்படுத்த கட்டாயம் விரும்புவார்.

பிறந்த நாள், மண நாட்களில் உங்கள் துணைவரின் மனதுக்குப் பிடித்த பரிசுகளை சர்ப்ரைஸாகக்  கொடுத்து அசத்துங்கள். உங்கள் ரொமான்ஸ் உங்கள் துணையையும் தொற்றிக் கொள்ள, வாழ்க்கையே ஜாலிதான்!

17 முதல் 23 வரை:
வாழ்த்துக்கள்! தாம்பத்திய வாழ்வில் ரொமான்ஸின் பங்கை அறிந்து வாழும் உங்கள் வாழ்க்கை நித்தம் பூக்கும் புத்தம் புதுமலர்! ஒருவருக்கொருவர் அன்புடன் விட்டுக் கொடுத்து ‘மேட் ஃபார் ஈச் அதரா’க வாழ்கிறீர்கள்.

ரொமான்ஸைப் புதிய வழிகளில் செயல் படுத்தி, மேலும் இறுக்கத்துடன் வாழ முயற்சி செய்யுங்கள். மனத் தேவைகளுடன், உடல் தேவைகளிலும் இணைந்து ஈடுபட்டு, இனிய காதல் வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள்.

24 முதல் 30 வர:
நீங்கள் ஒருவருக்கொருவர் அன்பையும், காதலையும் காட்டிக் கொள்வதைவிட, செயற்கையாக வாழ்ந்து – அட்டைகள், கேண்டில் லைட் டின்னர் என்பதையே அதிகம் விரும்புபவர்கள். ரொமான்ஸ் என்பது இது போன்ற காரியங்களைச் செய்வது மட்டுமல்ல.

இருவரும் ஒன்றாகச் சேர்ந்து இருந்து, கைகோர்த்து, உடலாலும், உள்ளத்தாலும் இணைந்து வாழ துணை செய்வது. படித்த நிமிடமே மறந்துவிடும் வாழ்த்து அட்டை வாசகங்களைவிட, இனிய உணர்ச்சிகளாலும் காதலினாலும் துணையைக் கட்டிப் போட முயற்சி செய்யுங்கள்!






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக