இது சுற்றுலா சீஸன்.
மே மாதத்தில் ஆரம்பிக்கும் சீஸன் செப்டம்பர் வரை போகும். நிறைய பேர் வடநாடு, வெளிநாடு
என்று போக விரும்புவார்கள். நீங்கள் செல்ல விரும்பும் இடங்கள் பற்றிய விவரங்களை
உங்கள் கம்ப்யூட்டரிலேயே தெரிந்து கொள்ளலாம்.
வெளி நாடுகளுக்குச் செல்வதற்கு
தற்காலத்தில் நிறைய தள்ளுபடிகள், பயணத் தொகைக் குறைவு என்று பல சலுகைகளை விமான
நிர்வாகங்கள் அளிக்கின்றன. ஆனால் அவை பணம் படைத்தவர்களுக்கு மட்டும் ஏற்ற
திட்டங்கள்! நடுத்தர வர்க்கத்தினர் நம் இந்தியாவிற்குள் உள்ள எண்ணற்ற சுற்றுலாத்
தலங்களுக்குச் செல்ல பல அரசாங்க அலுவலகங்களில் எல்.டி.சி முறை உள்ளது. இதனை
சுற்றுலா சீஸனில் பயன்படுத்திக் கொள்ளலாம்.
டிராவல்ஸ் மூலம் சென்றாலும்
போகுமிடங்கள் பற்றித் தெரிந்து கொள்ளலாம். நிறைய பேர் தனிப்பட்ட முறையிலும் செல்ல
ஆசைப்படுவார்கள்.
எங்கு சென்றாலும் முன்னதாகத்
திட்டமிடுதல் அவசியம். குறைந்த பட்சம் 1½ மாதத்திற்கு முன்பே பயணச் சீட்டுகள்
வாங்குவது நல்லது. கடைசி நேரத்தில் வெயிட்டிங் லிஸ்டில் டிக்கட் வாங்கி
பிரச்சனைகளோடு கிளம்புவது, பயணம் செல்வதற்கான பயனே இல்லாமல் செய்துவிடும்.
பயண டிக்கட்டுகள், ஹோட்டல்
ரிசர்வேஷன், செல்லும் இடத்தில் சுற்றிப் பார்ப்பதற்கான இடங்கள், இவைகளைப் பற்றிய
விபரங்கள் அனைத்தையும், இருந்த இடத்திலிருந்தே தெரிந்து கொள்ள உதவியாக இருப்பது இண்டர்நெட்.
இண்டர்நெட்டில் உள்ள கணக்கிட முடியாத உபயோகமான செய்திகள், மற்றும் விபரங்கள்,
பார்க்க வேண்டிய இடத்தைப் பற்றிய விபரங்கள், ஹோட்டல்கள், தங்குமிடங்கள், மேலும்
அங்கு கிடைக்கும் பொருட்கள் பற்றிய விபரங்களைச் சேகரித்து அவற்றை ஒப்பிட்டுப்
பார்த்து பட்ஜெட்டிற்கு ஏற்றதைத் தேர்ந்தெடுக்கலாம்.
இண்டர்நெட் மூலம் பயண ஏற்பாடுகள்
செய்வது நம் நாட்டைப் பொறுத்தவரை இன்னும் முன்னேறாத ஒன்று. காரணம் இண்டர்நெட்
மூலம் பணம் செலுத்தி புக் செய்வது சரியாக இருக்குமா? இந்த விஷயத்தில் சற்று
விசாரித்துச் செயல்பட வேண்டியது அவசியமே!
அந்த வெப் தளத்தின் அலுவலகம் நாம்
இருக்கும் ஊரில் இருந்தால் அங்கு சென்று விசாரிக்கலாம். பல தளங்களில் அவ்வூரைப்
பற்றிய அனைத்து விபரங்களும் மிகத் தெளிவாகக் கொடுக்கப்பட்டிருக்கும். நம் சந்தேகங்களை
அவர்கள் கொடுத்துள்ள மின்னஞ்சல் விலாசத்திற்கு அனுப்பி விபரம் அறிந்து கொள்ளலாம்.
பணத்தை கிரெடிட் கார்ட் மூலம் செலுத்த தயக்கமாக இருந்தால், செக் அல்லது டி.டி.
மூலம் அனுப்பலாம். சுற்றுலா பற்றிய தகவல்களுக்கான சில தளங்கள்:
இந்த இணைய தளங்களில் ஒவ்வொரு மாநிலத்திலும்
பார்க்க வேண்டிய இடங்கள், டூர் பாக்கேஜ்கள் (tour packages), பிரயாணம் சம்பந்தமான தகவல்கள்,
குறிப்புகள் போன்றவை நிறைய உள்ளன.
இண்டர்நெட் மூலம் ரயில் டிக்கட்டை
இருந்த இடத்திலிருந்தே பெற நீங்கள் செல்ல வேண்டிய தளம் www.irctc.in இதில் உறுப்பினராகப் பதிவு செய்து கொண்டால் டிக்கட்
நிலவரம், புகைவண்டித் தடங்கள், சிறப்பு ரயில்கள் பற்றிய எல்லா விபரத்தையும்
தெரிந்து கொண்டு டிக்கட் பதிவு செய்யலாம். நாற்பது ரூபாய் சர்வீஸ் சார்ஜ்
அதிகமானாலும் ஸ்டேஷனில் டிக்கட் வாங்க காத்திருக்கும் நீண்ட வரிசை, நேர விரயம்
இவற்றைத் தவிர்க்கலாம்.
விமானப் பயணத்திற்கான தளங்கள்:
சுற்றுலா செல்ல தயாரா? நீங்கள் செல்லுமுன் கவனிக்க வேண்டிய
சில முக்கிய விஷயங்கள்:
இந்நாட்களில் வீட்டைப்
பூட்டிவிட்டு வெளியூர் செல்வது ஆபத்தானது. அருகில் இருப்பவர்கள் யாரையாவது தினமும்
இரவில் தங்கியிருக்கச் சொல்லலாம்.
நாம் செல்லும் இட்த்தின் விபரம்,
தங்கும் விலாசம், ஃபோன், மொபைல் நம்பர் இவற்றை அருகில் வசிப்பவர்கள், மிக
நெருக்கமாகப் பழகுவோரிடம் கண்டிப்பாக கொடுத்துச் செல்வது அவசர, ஆபத்து நேரங்களில்
உதவும்.
அதிக அளவு பணம், நகைகளை
பயணத்தின்போது எடுத்துச் செல்வதைத் தவிர்க்கவும். கிரெடிட் கார்ட் மற்றும் நாம்
செல்லும் இடத்தின் தங்குமிடம் பற்றிய விலாசம் ஃபோன் நம்பர்களை மறக்காமல் எடுத்துக்
கொள்ளவும்.
எல்லா குடும்ப அங்கத்தினர்களும்,
விலாசம் மற்றும் ஓரளவு பணம் இவற்றைத் தனித்தனியாக வைத்துக் கொள்வது நல்லது.
மறக்காமல் தண்ணீர்க் குழாய்களை
மூடவும். மின் விளக்குகள், டி.வி., கம்ப்யூட்டர் ஸ்விட்சுகளை அணைத்து விடவும்.
வீட்டில் வளர்ப்புப் பிராணிகள் இருந்தால் அவற்றிற்குத் தகுந்த ஏற்பாடு
செய்துவிட்டுச் செல்லவும்.
உங்கள் சுற்றுலா இனிய பயணமாகவும்,
இன்பச் சுற்றுலாவாகவும் இருக்க நல்வாழ்த்துக்கள்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக