மே 2003 மங்கையர் மலர் இதழில் ‘கானல்
நீருக்கு ஓடும் மான்கள்’ என இன்றைய இளைய தலைமுறை பற்றி (சில வார்த்தைகளில்...)
எழுதியிருந்தோம். சகோதரிகள் நிறைய பேர் தங்கள் எண்ணங்களையும் எழுதியிருக்கிறார்கள்
– ஆசிரியர்.
அவற்றுள் நான் எழுதிய என் எண்ணங்கள் இதோ!
கறை வெளிவராத நாப்கின்
உபயோகித்தால், இடுப்பு வலியும், கால் வலியும் குறைந்து விடுமா என்ன? அதற்கும்
பெயின் கில்லர்களை உபயோகித்து வேலைச் சுமைகளில் மூழ்கி விடுகிறோம். இதனால் உடல்
ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு, ஏகப்பட்ட பிரச்சினைகள்.
சோர்ந்து உட்காரும்போது, ‘நான்
இருக்கிறேன் டியர்! கவலைப்படாதே’ என்று ஆறுதல் கூறும் கணவரும், ‘டோண்ட் ஒர்ரி மம்மி!
உனக்குத் துணையாக நாங்கள் இருக்கிறோம்’ என்று கூறும் குழந்தைகளும், ‘உனக்கு எந்த
உதவியும் நாங்கள் செய்கிறோம்’ என்று சொல்லும் பெரியவர்களும் நம்முடன் இருந்தால்,
அந்த வார்த்தைகள் தரும் பூஸ்ட் உற்சாகத்தில் நாம் உலகையே வெல்லலாம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக