Thanjai

Thanjai

புதன், 23 மார்ச், 2011

மஹாஷோடஸி



மஹாஷோடஸி
(குமுதம் பக்தி 15-09-2008 இதழில் வெளியானது)



ஆதிசங்கரர் ஸ்தாபித்த நான்கு பீடங்களில், அவரது நான்கு சீடர்களில் ஒருவரான தோடகாச்சாரியாரை பிரதானமாக வைத்து உருவாக்கப் பட்டது ஜ்யோதிர்மடம். இதன் பீடாதிபதியாக இருந்த சிவரத்னகிரி சுவாமிகளின் முக்கிய சீடரான ஞானானந்தகிரி சுவாமிகளின் பிரதான சீடர் ஹரிதாஸ் கிரி ஸ்வாமிகள். அவரால் தென்னாங்கூரில் உருவாக்கப்பட்டதே தட்சிண பண்டரிபுரம் எனும் பாண்டுரங்கன் ஆலயம். 

இவ்வாலய ராஜகோபுரம் சோழர் காலத்து கலை வடிவிலும், கர்ப்பக்கிரகம் பூரி ஜகன்னாதர் ஆலய வடிவிலும் அமைந்து, தெற்கு வடக்கு ஒற்றுமையை எடுத்துக் காட்டுகிறது ஆலயத்தினுள்ளே அமைந்துள்ள கட்டட அமைப்பும், கவின் மிகு ஓவியங்களும், விஸ்வரூப அமைப்பில் பாண்டுரங்கன், ருக்மாயி விக்ரக அழகும் எழுத்தில் வடிக்க முடியாதது. 

இங்கு ஹரிதாஸ்கிரி சுவாமிகளின் பிருந்தாவனத்திற்கு இடப்புறம் அமைந்துள்ளது மஹாஷோடஸி அம்மன் சன்னதி. காஞ்சி காமகோடி பீடத்திற்கு காமாட்சி, சிருங்கேரி பீடத்திற்கு சாரதா போன்று ஜ்யோதிர் மடத்திற்கான தேவி மஹாஷோடஸி. இத்தேவி ஸ்ரீ சக்ர வடிவிலோ, மஹாமேரு வடிவிலோ மட்டுமே வழிபடப்பட்டு வந்தாள். இவளுக்கு முதன் முதலாக உருவம் அமைந்து எல்லோரும் எளிய முறையில் வழிபட, அங்கபிரத்யங்க தேவதைகளுடன் காட்சி அளிக்கிறாள். முருகன், விநாயகர், ருத்ரன், வராஹி, வைஷ்ணவி, சுதர்சனம் போன்ற 32 பரிவார தேவதைகளுடன் கொலுவீற்றிருப்பதால் ஹோமம் அர்ச்சனை ஆகியவற்றை ஸ்ரீவித்யா உபதேச க்ரம முறைகளில்தான் பக்தர்கள் வழிபட முடியும். நவராத்திரியில் இத்தேவியின் அலங்காரமும் அழகும் காணக் கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும்.
வந்தவாசியிலிருந்து 8 கி மீ தொலைவில் தென்னாங்கூர் உள்ளது




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக