Thanjai

Thanjai

ஞாயிறு, 20 மார்ச், 2011

என்ன செய்யறாங்க லேடீஸ் கிளப்பிலே

குமுதம் சிநேகிதி அக்டோபர், 2003 இதழில் வெளியானது



திறமைக்கு மரியாதை

நான் மும்பையில் வசித்து வருகிறேன். எங்களைப் போன்று வேற்று மாநிலத்தில் வந்து வாழ்வோர், நம் ஊர் மக்களை சந்திப்பது, மண்வாசனை நிகழ்ச்சிகளைப் பேசி மகிழ்வது போன்ற சந்தர்ப்பங்களை பெரிதும் விரும்புவார்கள். நவி மும்பையில் எங்களுக்கு அது போன்ற சந்தர்ப்பங்களைத் தருவது வாஷி ஃபைன் ஆர்ட்ஸ் கிளப். நவி மும்பை வாழ் தமிழர்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட வாஷி ஃபைன் ஆர்ட்ஸ் கிளப்பின் பெண்கள் இணைந்து 1999ம் ஆண்டு அக்டோபரில் ஆரம்பிக்கப்பட்ட கிளப் சிறப்பாக இயங்கி வருகிறது.

கிளப் உறுப்பினர்களது குழந்தைகளின் திறமைகள் ஊக்குவிக்கப்படுகின்றது. நவராத்திரி சமயம் 3 நாட்கள் கொலு வைத்து, பூஜை, சுலோகம், மாலை நேரம் வெற்றிலை பாக்கு கொடுப்பது போன்ற நம் பாரம்பரிய முறையில் நடத்தப்படுகிறது. அத்துடன் பெண்கள் சந்திக்க ஒரு ‘கெட் டு கெதர்’ வாய்ப்பும்கூட!

கிளப் உறுப்பினர்களின் தனிப்பட்ட திறமைகளை வெளிக்கொண்டுவரும் விதமாக அவர்களாலேயே நடத்தப்படும் க்விஸ், மெல்லிசை நிகழ்ச்சி, பட்டி மண்டபம் இவை நல்ல வரவேற்பைப் பெற்ற சிறந்த நிகழ்ச்சிகள். ‘இவர்கள்’ என்ற பெயரில் முழுதும் பெண்களாலேயே நடத்தப்படும் நாடகம் மிக நன்றாக இருந்ததால் காட்கோபரிலுள்ள ரசிக ரஞ்சனி சபாவில் மீண்டும் மக்களின் ஏகோபித்த ஆதரவு, வரவேற்பின் பேரில் நடத்தப்பட்டது.


அவசரமான மும்பை வாழ்க்கையில் தமிழ்ப் பெண்களுக்கு உற்சாகமான, உபயோகமான நிகழ்ச்சிகளைத் தந்து, ஒரே மாதிரியான இயந்திர வாழ்க்கையிலிருந்து விடுபட்டு மகிழ வாஷி ஃபைன் ஆர்ட்ஸ் கிளப் வழி செய்கிறது. இத்துடன் அவ்வப் பொழுது வயிற்றுக்கும் உணவு உண்டு! அடுத்தவருடன் அளவளாவி, மனம் விட்டுப் பேசி, வாய் விட்டுச் சிரிக்கும்போது பல கவலைகள் பறந்தோடிப் போவதும் இயல்புதானே? இதற்கு நல்ல வாய்ப்பும், திறமையைக் காண்பிக்க வாகான வழியும், தமிழ்ப் பெண்களுக்குள் தொடர்பும் ஏற்படுத்தித் தரும் வாஷி ஃபைன் ஆர்ட்ஸ் கிளப், நவி மும்பை வாழ் தமிழ் மகளிர்க்கு ஒரு வரப் பிரசாதம்!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக