Thanjai

Thanjai

வெள்ளி, 3 ஜனவரி, 2014

ஸ்ரீ மாவுலம்மன்... பீமாவரம்

அழகே  உருவாய் ஸ்ரீமாவுலம்மன்...

தீபம்  5.1.2014 இதழில் வெளியானது



நம்  நாட்டில்  எல்லை  தெய்வங்கள் மாரியம்மன் , பொன்னியம்மன்காளியம்மன்மதுரை  வீரன்  என்ற  பெயர்களில்   எல்லா  கிராமங்களிலும் அருள்  பாலிப்பார். அந்த எல்லை தெய்வங்களே   தீய  சக்திகளில்  இருந்தும்கொடிய நோய்களில்  இருந்தும்  நம்மைக்  காப்பாற்றும்  என்பது  நம்  நம்பிக்கை. சமீபத்தில்  ஆந்திரா  சென்றிருந்த சமயம்  பீமாவரம்  என்ற  ஊரில் தரிசனம்  தரும்  மாவுலம்மா என்ற  தேவியின் ஆலயம்  சென்றிருந்தேன். 


இவ்வாலயத்தில்  வானளாவ  உயர்ந்து  பிரம்மாண்டமாகக்  காட்சியளித்த  தேவியைக்  கண்டு பிரமித்து விட்டேன்.ஜகன்மாதாவாக , காளிதேவியாகக்  காட்சியளிக்கும்  காவல்  தெய்வம் மாவுலம்மா  தேவி அங்கு  கோயில்  கொண்டது  எப்படி?

கி.பி.1200ல்  இந்த  அம்மன்  தோன்றியதாகக்  கூறப்பட்டாலும் பீமாவரத்தில்  அரசமரம்  மற்றும்  வேப்பமரங்களுக்கு கீழே  காட்சியளித்த  அம்மன் கி.பி. 1880லிருந்தே  மக்கள்  வழிபட  தன்னை  வெளிக்  காட்டிக் கொண்டாள் அவ்விடத்தில்   மாமரங்கள் நிறைந்திருந்ததால்  'மாமில்ல  அம்மா' (மாமில்ல  என்பது  மாமரம்)  என்று  அழைக்கப்பட்டாள்.  சுற்றியுள்ள  கிராம  மக்கள்  இத்தேவியை  தங்கள்  குல  தேவதையாகக்  கொண்டதால் 'மா  உள்ளம்மா' (எங்கள் சொந்த   அம்மன்)  என்ற  பெயர்  பெற்றதாகக்  கூறுகிறார்கள். 
 .
1880ம் வருடம்  வைகாசி   மாதத்தில்  மாறல்ல  மச்சி  ராஜு  மற்றும்  கிராந்தி  அப்பண்ணா  ஆகியோரின்  கனவில்  தோன்றிய  அன்னை  தான்  இருக்குமிடம்  கூறி  தனக்கு  ஆலயம்  கட்டும்படி  சொல்லஅவர்களும்   தேவியைக் கண்டெடுத்து  ஒரு  சிறு  குடிசை  அமைத்து    வழிபட்டு வந்தனர். பின்பு அவ்வூரின் கடைத்தெருவில் ஒரு  ஆலயம்  அமைத்து  வழிபட்டனர். அம்மனின் அற்புத  லீலைகளும்அளப்பரிய கருணையும்  பெற்ற  பலரும்  அத்தேவியை  தங்கள்  குல  தெய்வமாக  வணங்க  ஆரம்பித்தனர்.  தேவியின்  பெருமை  சுற்றியுள்ள  கிராமங்களுக்கும்  பரவலாயிற்று.

1910ம் ஆண்டு வெள்ளத்தில்  தேவியின்  உருவம்  சிதைந்தபோது  கிராந்தி  அப்பாராவ்  என்ற  சிற்பியால்  முன்பிருந்த   மூர்க்கமான உருவம்  மாற்றப்பட்டு  தற்போது  அருள்  தரும்  சாந்தி ரூபமாக  வடிக்கப்பட்டது.அழகிய  கோபுரத்துடன்  காட்சியளிக்கும்  ஆலயத்தில்  எப்பொழுதும் மக்கள்  கூட்டம்  நிரம்பியிருக்குமாம். தென்னிந்திய  பாணியில்  அமைந்துள்ள  ஆலயத்தினுள்  தேவியின்  பல  வடிவங்கள்  வண்ணமயமாகக்  காட்சி  தருகிறது.
அன்னையின்   சந்நிதிக்கு செல்வோம்.  அற்புதமான,   மனத்தைக் கொள்ளை  கொள்ளும்  அழகிய  , அருள்  பொழியும்  திருவுருவம். பத்து  அடி  உயரத்தில்  பளபளப்பும்தகதகப்புமாக  இடக்கால்  மடித்துவலக்காலை  தொங்கவிட்டு  நெடிதுயர்ந்து  காட்சி  தரும்   தேவியின்  நான்கு  கரங்களில்  சூலம்உடுக்கைவாள் கலசம்  என்று  தன்னை  அண்டி  வந்தாரைக் காக்கும்  முகமாகக்  காட்சி  தருகிறாள். அத்தனையும்  பொற் கவசங்களால்  மின்னுகிறது!விசே ஷ நாட்களில்   24 கிலோ   தங்கம்,  274  கிலோ  வெள்ளி  மற்றும்  வைரத்தால்  ஆபரணங்கள்  பூண்டு  65  கிலோ  தங்கப்  புடவை  அணிந்து  அற்புதமாகக்  காட்சி  தருவாள். ஆந்திராவின்  செல்வம்  நிறைந்த  ஆலயங்களுள்  இவ்வாலயமும்  ஒன்றாம். விரிந்த  நயனங்களும்வரம்  தரும்  கருணைக்   கரங்களுமாக  எழிலாகக்  காட்சி  தரும்  அன்னையைக்  காணக்  கண்கோடி  வேண்டும். அவளது  காருண்யம்  நம்மைக்  கட்டிப்போட்டு அங்கிருந்து நகர   முடியாமல் செய்கிறது. 
வரப்பிரசாதியான  அன்னையிடம்  முறையிடும்  வேண்டுதல்கள்  விரைவில்  நிறைவேறுவதால்  மக்கள்  தேவியை  அண்டி  வந்து  பிரார்த்தனைகளை  செலுத்துகின்றனர். நாம்  அர்ச்சனைக்கு  கொடுத்தாலும்இல்லாவிடினும் ஆலயத்திற்கு  தரிசனத்திற்கு  வரும்   அனைத்து  பக்தர்களின்  பெயர், கோத்திரம்நட்சத்திரம்  கேட்டு  அர்ச்சகர்கள்  பொறுமையாக  பூஜிக்கும்  முறை  ஆந்திராவின்  அத்தனை  ஆலயங்களிலும்  நான்  கண்ட  அதிசயம்.

ஆலயத்தில்  தினமும்  பிராதகால  பூஜைகுங்குமார்ச்சனை  ,வேத  பாராயணம், சகஸ்ரநாமம் அன்னதானம்   ஆகியவை  தவறாது  நடைபெறுகிறது.


அன்னையின்  அருளால்  அவ்வூர்  மிகச்  செழிப்புடனும்வளத்துடனும்  கல்வி, தொழில், அனைத்திலும்  சிறப்புற்று  விளங்குவதாக  அவ்வூர்  மக்கள்  பக்தியுடன்  கூறுகிறார்கள். மக்களின்  எல்லாக்  குறைகளையும்   அன்னை  உடனே களைந்து  அவர்களின்  வாழ்வை  இனிதாக்குகிறாள் .

இங்கு  ஆனி மாதம்  பௌர்ணமி  அடுத்து  வரும்  பிரதமையிலிருந்து  கிட்டத்தட்ட  ஒரு  மாதம்  திருவிழா மிக  விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. ஜனவரி  மாதம்   சங்கராந்தியின் போது 40  நாட்கள் ஆண்டு  உத்சவம்   கொண்டாடப்  படுகிறது.  நவராத்திரியில்  லக்ஷகுங்குமார்ச்ச்சனாமற்றும்  சண்டி  ஹோமம் நடைபெறும்.   ஆடிதை  பௌர்ணமி  மற்றும்   வெள்ளிக்கிழமைகளில்  அன்னை  அழகிய  அலங்காரத்தில்  காட்சி  தருவாள்.

மேற்கு  கோதாவரி  மாவட்டத்தில்  அமைந்துள்ள  இவ்வாலயம்  பீமாவரத்தில்விஜயவாடாவிலிருந்து   100  கிலோமீட்டர்  தொலைவில்   உள்ளது. சிவபெருமானின்  பஞ்சராம  தலங்களில்   ஒன்றான  ஸ்ரீசோமேஸ்வர  சுவாமி  கோயில்   கொண்டிருக்கும்  பீமாவரம்  செல்பவர்கள்  ஸ்ரீமாவுலம்மனையும்  தரிசித்து  அருள்  பெருக.


5 கருத்துகள்:

  1. வணக்கம்...

    http://gopu1949.blogspot.in/2014/03/vgk-07-02-03-second-prize-winners.html - திரு. VAI. GOPALAKRISHNAN ஐயா அவர்களின் தளம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… Followers ஆகி விட்டேன்… தொடர்கிறேன்...

    போட்டியில் வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பு நண்பர் தனபாலன்

      வணக்கம். உங்கள் முதல் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும்,பாராட்டிற்கும் மிக்க நன்றி. தங்கள் பதிவைப் படித்தே நான் என்னுடைய வலைத்தளத்தை .காம் என்று மாற்றினேன். மிக எளிமையாக,அழகாக விளக்கியிருந்தீர்கள். தகவலுக்கு மிக்க நன்றி. தங்கள் வலையகத்தில் அடிக்கடி வலம் வருவதுண்டு. எனினும் பின்னூட்டம் இட்டதில்லை. வித்யாசமான உங்கள் தளம் அருமை.

      நீக்கு
  2. அழகே உருவாய் ஸ்ரீமாவுலம்மன்...பற்றி அருமையான ப்கிர்வுகள்..பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  3. அன்புள்ள ராஜராஜேஸ்வரி

    உங்களின் முதல் வருகைக்கும், பாராட்டுக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  4. ’தீபம்’ இதழில் வெளியானதற்குப் பாராட்டுக்கள் + வாழ்த்துகள். அருமையான பகிர்வு.

    அன்புடன் கோபு

    பதிலளிநீக்கு