மங்கையர் மலர் செப்டம்பர் 1-16, 2015 இதழில் புடவை பரிசுப் போட்டியில் பிரசுரிக்கப்பட்ட தமாஷ் அனுபவம்
35 x 24 புடவை பரிசுப் போட்டி 13ல் வெற்றி பெற்றவர்கள் வழங்கிய தமாஷ் அனுபவங்களில் என்னுடைய குறிப்பு இதோ!
அப்போது நாங்கள் பெங்களூருவில் குடியிருந்தோம். எனக்கு கன்னடம் தெரியாது. ஒரு முறை எங்கள் ஹவுஸ் ஓனரின் வீட்டுக்குச் சென்றிருந்தோம். அவர் எங்களைப் பார்த்து ‘பன்றி-குட்றி என்றார். ‘என்ன இவர் நம்மை பரியாதை இல்லாமல் பேசுகிறாரே’ என்று எண்ணியபோது, நாற்காலியைக் காட்டி ‘குத்து கொட்றி’ என்றார். சென்னையில் ‘குந்திக்க’ என்று கூறுவது ஞாபகத்துக்கு வர, நாற்காலியில் உட்காற்ந்தோம். பிறகு ஏதோ புரிந்தும், புரியாமலும் பேசிவிட்டு வெளியில் வந்ததும் எங்களால் சிரிப்பை அடக்க முடியவில்லை. இன்றும் அந்த அனுபவத்தை நினைக்கும்போது சிரிப்புத்தான் வருகிறது.
ஹா.... ஹா...
பதிலளிநீக்கு