மதுர வீரன் எங்க சாமி!
எங்கள் குலதெய்வம் ஆடுதுறை பெருமாள் கோயில்
(வட குரங்காடுதுறை, தஞ்சை மாவட்டம்) என்ற கிராமத்தில் உள்ள மதுரை வீரன்
சுவாமி. இரண்டு தலை முறைக்கு முன்பு வரை பூஜைகள் நடந்தது. அடுத்த தலைமுறையினர்
வேலை நிமித்தம் வெளியே செல்ல, ஆலய வழிபாடும் நிறுத்தப்பட்டது. சில திருடர்கள் சுவாமி
சிலையின் அடியிலிருந்த நவரத்தினங்களை அபகரித்துக் கொண்டு, சிலையை வாய்க்காலில் போட்டுவிட்டனர்.
அச்சமயம் என் பெரிய மாமனாரின் பிள்ளைக்கு டைபாய்டு வந்து நிலைமை மிக மோசமானது.
அப்போது,
’வாய்க்காலில்
தலை குப்புற கிடக்கும் என்னை கோயிலில் பிரதிஷ்டை செய்து பூஜை செய். உன்
குடும்பத்தைக் காப்பாற்றுகிறேன்’ என்று அசரீரி போல் கேட்க, அவரும் அப்படியே செய்தாராம். அவர் மகனின்
உடல் நிலை தேறியது.
ஆலய பூஜை முறை எப்படி என்று காஞ்சி மகா பெரியவரிடம்
கேட்ட போது, அவர், ’வலது கையில் கதையுடன் காட்சி தரும் இவர், சாந்தமான மதுர வீரன். இவருக்கு பலி
கொடுப்பதெல்லாம் கூடாது’ என்று சொன்னாராம்.
பெயருக்கேற்ப, 2 அடிக்கும் குறைந்த உயரத்தில், கனிவான முகம் , இடுப்பில் இடக்கையும், வலக்கையில் கதாயுதம் கொண்டு சாத்வீகமாக
புன்னகை ததும்பக் காட்சி தருவார். இரவு குதிரை மீது ஏறி ஊரைச் சுற்றி வந்து
மக்களைக் காப்பவர் இவர்; குதிரயின் குளம்பொலி இரவில் கேட்குமாம்.
ஒரு பக்தரின் கனவில் தோன்றிய மதுரை வீரன், ’எனக்கு ஒரு குதிரை சிலை செய்து வை’ என்று ஆணையிட, அழகிய குதிரை இன்று அவர் முன் நிற்கிறது.
தற்சமயம் பூஜை செய்து வரும் என் மைத்துனரின் மகன் மனத்தில் தோன்றி, ;உன் அப்பாவுக்குப் பிறகு நீயே பூஜை செய்.’ என்று கூறியது போல் உணர்ந்தாராம்.
நாங்கள் வேண்டும் வரங்களை நிறைவேற்றியருளும்
மதுர வீரனின் அருளுக்கு இணையேது? அன்னதானம் செய்வது இவ்வாலயத்தின் பிரதான பிரார்த்தனை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக