Thanjai

Thanjai

புதன், 24 ஜூலை, 2013

ஈகோவைத் தள்ளி வைப்பது நல்லது




(குமுதம் சிநேகிதி நவம்பர் 26-30, 2012 இதழில் வெளியானது)

சொல்கிறார் சென்னை வாசகி ராதா பாலு

















எனக்கு அலெனா, ஆர்த்தி என்று இரண்டு மருமகள்கள். அவர்கள் இருவரும் அன்பு, பண்பு, பாசம், மரியாதை, அறிவு என எல்லாவற்றிலும் எக்ஸ்பர்ட்.

தற்போது ஜெர்மனியில் வசித்து வரும் என் மூத்த மருமகள் அலெனா ரஷ்யப் பெண். அவள் இங்குள்ள மனிதர்களிடம் எப்படி பழகுவாளோ என்று நாங்கள் பயந்திருந்தோம். யாரை எப்படிக் கூப்பிட வேண்டும்? யாரிடம் எப்படிப் பழக வேண்டும்? சமையல் என நம் கலாசாரத்தை என்னிடம் ஆசையாகக் கற்றுக் கொண்டாள். எங்கள் உறவினர்களிடம் ஒட்டுதலாகப் பழகினாள். நான் ஜெர்மனி சென்றிருந்தபோது அவள் என்னை ஒரு வேலையைக் கூட செய்ய விடவில்லை. அவளாகவே அனைத்தையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்தது என்னை மிகவும் பிரமிக்க வைத்தது.


என் இரண்டாவது மருமகள் ஆர்த்தியும் மூத்தவ்ளைப் போல் எங்கள் உறவினர்களிடம் பாசத்துடன் பழகுவாள். விட்டுக் கொடுத்துப் போவது, தவறுகளைப் பெரிது படுத்தாமல் இருப்பது, யார் நல்ல விஷயங்களைச் செய்தாலும் தயங்காமல் பாராட்டுவது என சிறந்த குணங்கள் அவளிடம் இருப்பதால் எங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இதுவரை வந்ததில்லை. எங்களைப் போல ஈகோவை கொஞ்சம் தள்ளி வைத்துப் பழகினாலே போதும். மாமியார், மருமகள் பிரச்னை என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போகும்




1 கருத்து:

  1. குமுதம் சினேகிதியில் வெளியான தங்களின் ஆக்கத்திற்கு முதலில் என் பாராட்டுக்கள் + வாழ்த்துகள்.

    படங்களும் சொல்லியுள்ள விஷயங்களும் வெகு அருமை. அருமையான மாமியாருக்கு கிடைத்துள்ள அருமையான மருமகள்கள். எல்லோருக்கும் பாராட்டுக்கள் + வாழ்த்துகள்.

    ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துப் போனால் பிரச்சனையே இல்லைதான்.

    http://gopu1949.blogspot.in/2011/02/blog-post_13.html இந்த என் பதிவினில் 04.03.2014 அன்றே பின்னூட்டமிட என்னை அழைத்திருந்தீர்கள். என்னால் இன்று தான் கருத்தளிக்க முடிந்துள்ளது. ஓர் ஆண்டு தாமதத்திற்கு என்னை மன்னிக்கவும்.

    பதிலளிநீக்கு