Thanjai

Thanjai

செவ்வாய், 19 மே, 2015

எப்பொழுதும் நினைவில் கொள்ள


கல்கண்டு 04-04-2005 இதழில் வெளியானது



திறமை இறைவனால் அளிக்கப்பட்டது. பணிவுடன் இரு. புகழ் மனிதனால் கிடைக்கப்படுவது. நன்றியுடன் இரு. தற்பெருமை தானே உண்டாக்கிக் கொள்வது. கவனமாக இரு.

நம் ஆங்கில வருடத்தின் முதல் மாதமான ஜனவரி ‘ஜேனஸ்’ என்ற ரோமானியக் கடவுள் பெயரிலிருந்து தோன்றியது. இக்கடவுள் வீட்டின் வாயில்படியைக் காக்கும். இருதலை கொண்ட காவல் தெய்வமாகும். ஒரு தலை கடந்த காலத்தையும், மறுதலை வருங்காலத்தையும் நோக்குவதாக அமைந்துள்ளது. ஜூலியஸ் ஸீஸரின் பெயரால் ‘ஜூலை’ மாதமும், அகஸ்டஸ் என்ற மன்னரின் நினைவாக ‘ஆகஸ்ட்’ மாதமும் உருவானது. செப்டம்பர், அக்டோபர், டிசம்பர் இவை பெயர் மாற்றம் பெறாத மாதங்கள் ஆகும். 

காகம் மணிக்கு 45 மைல் வேகத்தில் பறக்கும்.  

முந்திரிப் பருப்பு முதலில் தென் அமெரிக்காவில் உருவாகி உலகெங்கும் வந்தது.

எள் தோன்றிய  இடம் தென் ஆப்பிரிக்கா.

அன்னாசியின் பிறப்பிடம் பிரேசில் நாடு.



2 கருத்துகள்: