சினேகிதி பிப்ரவரி 2006 இதழில் வெளியானது
நம் வாழ் நாளில் நாம் பலருடன்
பழகுகிறோம். நட்புடன் இருக்கிறோம். ஆனால் யாராவது ஒருவர் மட்டுமே உள்ளார்ந்த,
ஆழ்ந்த நட்புடன் இருக்க மிடுயும். அப்படி பழக்கத்தால் மட்டுமன்றி, உள்ளத்தாலும்,
உணர்வுகளாலும் நட்பைத் தொடரும் சினேகிதிகள் நானும், முத்துலட்சுமியும்.
ஈரோட்டில் நாங்கள் இருந்த சமயம்,
என் மகனின் நண்பனின் தாயாக அறிமுகமான என் தோழி முத்துலட்சுமியின் நட்பின் வயது 15
வருடங்களுக்கு மேல்! எங்கள் எண்ணங்கள், ரசனைகள், அபிப்பிராயங்கள் ஒரே அலைவரிசையில்
இருந்த்தனால், எங்கள் நட்பும் இன்று வரை தொடர்கிறது. திருமணம், குடும்பம் என
பிரிந்து விட்டாலும், ஒவ்வொரு வருடமும், எப்படியாவது நாங்கள் ஒரு முறை சந்திக்கத்
தவறுவதில்லை.
கணவர் சகோதரி, மகள், தாய் என்று
யாரிடமும் பேச முடியாத பல விஷ்யங்களை நாங்கள் மனம் திறந்து பேசிக் கொள்வோம்.
அதனால் கிடைக்கும் ஆறுதலும், நிம்மதியும், சந்தோஷமுமே ஒரு நல்ல சினேகித்த்தின்
அடையாளம் என்பது எங்கள் எண்ணம்.
இதே சினேகிதியைப் பற்றி விரிவாக குமுதம் சிநேகிதி பிப்ரவரி 2004 இதழில் வெளியான தகவலைத் தெரிந்து
கொள்ள இங்கே
சொடுக்கவும்.
இனிய நட்புக்கு வாழ்த்துகள்...
பதிலளிநீக்கு